Published : Nov 27, 2024, 08:46 AM ISTUpdated : Nov 27, 2024, 09:30 AM IST
Jayam Ravi Salary for SK 25 : சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள எஸ்.கே. 25 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஜெயம் ரவி வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் சோலோ ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகி வருகிறது. அண்மையில் தீபாவளி பண்டிகைக்கு இவர் நடிப்பில் வெளிவந்த பிரதர் திரைப்படம் கூட படுதோல்வியை சந்தித்தது. இதனால் ரூட்டை மாற்றி உள்ள ஜெயம் ரவி, முதன்முறையாக வில்லனாக நடிக்க கமிட்டாகி உள்ளார். அதுவும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க உள்ளார் ஜெயம் ரவி. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
24
SK 25 Movie
இப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இது நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கில் சென்சேஷனல் நாயகியாக இருக்கும் ஸ்ரீலீலா நடிக்க உள்ளார். மேலும் நடிகர் அதர்வா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.கே. 25 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஜெயம் ரவி வாங்கி உள்ள சம்பளம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக அவர் மொத்தமே 20 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அந்த 20 நாட்களுக்கே அவர் 16 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஹீரோவாக நடிக்கவும் இதே தொகையை தான் வாங்கி வருகிறார். ஆனால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு 70 முதல் 100 நாட்கள் வரை கால்ஷீட் கொடுக்க வேண்டும். ஆனால் வில்லனாக வெறும் 20 நாட்கள் நடிக்க அவருக்கு அதே அளவு சம்பளம் கிடைத்துள்ளது ஜாக்பாட் தான்.
44
Jayam Ravi Movie Line Up
எஸ்.கே.25 படம் தவிர நடிகர் ஜெயம் ரவி கைவசம் காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்பட அரை டஜன் படங்கள் உள்ளது. இதில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதேபோல் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படம் ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வர உள்ளது.