நாகார்ஜுனா மகன் அகிலின் காதலி ஜைனப் அவரை விட இத்தனை வயது சீனியரா?

First Published | Nov 27, 2024, 7:50 AM IST

Akhil Akkineni and Zainab Ravdjee Age : நடிகர் நாகார்ஜுனாவின் இரண்டாவது மகன் அகில் அக்கினேனி, தன்னுடைய காதலியை நேற்று அறிமுகப்படுத்திய நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றி பார்க்கலாம்.

Akhil Akkineni and Zainab Ravdjee

தெலுங்கு திரையுலகில் பணக்கார நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனார். இவருக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. இவரின் முதல் மனைவி பெயர் லட்சுமி. அவரை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகை அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நாகார்ஜுனா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் லட்சுமிக்கு மகனாக பிறந்தவர் நாக சைதன்யா, அதேபோல் அமலாவுக்கு மகனாக பிறந்தவர் அகில் அக்கினேனி.

Nagarjuna Sons

நாகார்ஜுனாவை போல் அவரது மகன்களும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகின்றனர். குறிப்பாக நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. நடிகை சமந்தா உடனான நாக சைதன்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார் நாக சைதன்யா. இந்த ஜோடிக்கு டிசம்பர் 4ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்... டபுள் சந்தோஷத்தில் நாகார்ஜூனா; இளைய மகனுக்கு நடந்து முடிந்த நிச்சயம்! Viral Pics!

Tap to resize

Nagarjuna, Amala

மகனின் திருமண வேலைகளில் பிசியாக உள்ள நாகார்ஜுனா நேற்று மாலை தன்னுடைய இரண்டாவது மகன் அகில் அக்கினேனியின் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். அதன்படி அகில், ஜைனப் ரவ்ஜீ என்பவரை காதலிப்பதாகவும், இருவரும் அடுத்த ஆண்டு கரம்பிடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அகில் அக்கினேனிக்கு தற்போது 30 வயது ஆகிறது. அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் சிம்பிளாக நடைபெற்றுள்ளது.

Akhil Akkineni Lover Zainab Ravdjee

அகில் அக்கினேனியின் காதலி ஜைனப், ஒரு இஸ்லாமிய பெண். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஆவார். ஓவியக்கலைஞரான ஜைனப் ரவ்ஜீயும், அகில் அக்கினேனியும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் தற்போது நிச்சயம் செய்துள்ளனர்.

Akhil Akkineni and Zainab Ravdjee Age Difference

அகில் அக்கினேனியை விட அவரது காதலி ஜைனப் ரவ்ஜீ வயதில் மூத்தவர் ஆவார். அகில் அக்கினேனிக்கு தற்போது 30 வயது தான் ஆகிறது. ஆனால் அவரின் காதலி ஜைனப் அவரைவிட 9 வயது மூத்தவராம். காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை இந்த ஜோடி நிரூபித்து உள்ளது. இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... நாக சைதன்யா திருமண ஒளிபரப்பு உரிமை; இத்தனை கோடிக்கு வாங்கியதா Netflix?

Latest Videos

click me!