டபுள் சந்தோஷத்தில் நாகார்ஜூனா; இளைய மகனுக்கு நடந்து முடிந்த நிச்சயம்! Viral Pics!

First Published | Nov 26, 2024, 6:47 PM IST

Akhil Akkineni Engagement : பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு இன்று திருமணம் நிச்சயம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களை நாகார்ஜூனா வெளியிட்டுள்ளார்.

Actor Nagarjuna

தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் கூட, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு திகழும் ஒரு மூத்த நடிகர் தான் நாகர்ஜுனா. இப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவருடைய மூத்த மகன் தான் பிரபல நடிகர் நாக சைதன்யா. அண்மையில் அவருக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் திருமணம் நிச்சயம் நடைபெற்றது.

"நானும் விஜய் ரசிகன் தான்" ஆனா அரசியல் என்பது வேறு - போஸ் வெங்கட் அதிரடி!

Nagarjuna Son

விரைவில் இந்த ஜோடியின் திருமணம் நடக்க உள்ள நிலையில், பிரபல NETFLIX நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு அவர்களுடைய திருமண ஆல்பத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பிரபல நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் நாக சைதன்யாவிற்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், நாகர்ஜுனா குடும்பத்தில் மற்றும் ஒரு மகிழ்ச்சியான தருணம் நடக்க உள்ளது. 

Tap to resize

Akhil Akkineni

நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் தான் அகில் அக்கினேனி, 1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் குழந்தையின் நட்சத்திரமாகவே திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "மனம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். தொடர்ச்சியாக தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "ஏஜென்ட்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Akhil Engagement

Zainab Ravdjee என்பவரை விரைவில் அகில் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், இன்று குடும்பத்தார் முன்னிலையில் இந்த ஜோடிக்கு திருமண நிச்சயம் நடைபெற்று முடிந்திருக்கிறது. தன்னுடைய மகனையும் மருமகளையும் அனைவரும் வாழ்த்தி ஆசீர்வதிக்க வேண்டும் என்று இந்த நிகழ்வின் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் பிரபல நடிகர் நாகார்ஜுனா.

ரஜினி, கார்த்தி மட்டுமல்ல; மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையும் அடுத்த டாப் நடிகர்!

Latest Videos

click me!