இந்த சூழலில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய போஸ் வெங்கட் "நான் இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, ஒரு இளைஞன் என்னை பார்த்து முறைத்தான். அவன் ஒரு விஜய் ரசிகனாக இருப்பான் என்று நினைக்கிறேன். ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றிருந்தேன், வெகு நேரமாக என்னை ஒரு இளைஞன் முறைத்துக் கொண்டே இருந்தார். அருகில் சென்றேன், நீங்கள் விஜய் ரசிகரா என்று கேட்டதும் என்னை பார்த்து சிரித்து விட்டார்".
"நான் பிறரை விட விஜய்க்கு மிகப்பெரிய ரசிகன், அவருடைய படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க எப்பவுமே தவறியதில்லை. ஆனால் அரசியல் களம் என்பது வேறு, 70 ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு விஷயங்களை கொடுத்த ஒரு விஷயம் தான் திராவிடம். அதுதான் திராவிட முன்னேற்ற கழகம், அதைப் பற்றிய விமர்சனம் வைப்பது மிகவும் தவறு. தனி நபரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அது அவரவருடைய விருப்பம், ஆனால் ஒரு மிகப்பெரிய ஆற்றலை குறை சொல்வது தவறு. ஆகவே எனக்கும் விஜய்க்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. ஆனால் எப்பொழுதுமே அவரை ஒரு நடிகனாக நான் ரசித்துக்கொண்டே தான் இருப்பேன்" என்று கூறி இருக்கிறார்.
அப்பா எழுதி; அம்மா நடித்த பாடலை க்யூட்டாக பாடிய விக்கி - நயன் மகன்கள்