ரஜினி, கார்த்தி மட்டுமல்ல; மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையும் அடுத்த டாப் நடிகர்!

Ansgar R |  
Published : Nov 26, 2024, 04:47 PM IST

Mari Selvaraj : மிக குறைந்த படங்களே எடுத்துள்ளார் என்றாலும், மக்கள் மத்தியில் பேராதரவோடு பயணித்து வரும் இயக்குனர் தான் மாரி செல்வராஜ்.

PREV
14
ரஜினி, கார்த்தி மட்டுமல்ல; மாரி செல்வராஜ் இயக்கத்தில் இணையும் அடுத்த டாப் நடிகர்!
Mari Selvaraj

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கி, இன்று பலரும் பாராட்டும் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மாரி செல்வராஜ். பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்கின்ற திரைப்படம் தான் இவருடைய முதல் திரைப்படம். இணை இயக்குனராகவும், நடிகராகவும் நடித்து அசத்தியிருந்தார் மாரி செல்வராஜ். தொடர்ச்சியாக இயக்குனர் ராமோடு இணைந்து பயணித்து வந்த அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய கலை பயணத்தை இயக்குனராக தொடங்கினார்.

அப்பா எழுதி; அம்மா நடித்த பாடலை க்யூட்டாக பாடிய விக்கி - நயன் மகன்கள்

24
Director Mari Selvaraj

சமூக அக்கறையோடு தன்னுடைய திரைப்படங்களை எடுக்க வேண்டும், தன்னுடைய இளம் வயதில் தனக்கு ஏற்பட்ட வலிகளை மக்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கின்ற துடிப்போடு களம் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜின் இரண்டாவது திரைப்படம் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான "கர்ணன்" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, தொடர்ச்சியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான உதயநிதி ஸ்டாலினின் "மாமன்னன்" திரைப்படம் மாரி செல்வராஜின் புகழை வேறு ஒரு கட்டத்திற்கு எடுத்து சென்றது என்றே கூறலாம்.

34
Rajinikanth

இந்த ஆண்டு வெளியான மாரி செல்வராஜின் "வாழை" திரைப்படம் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தின் மூலம் இன்னும் மிகப்பெரிய புகழுக்கு சொந்தக்காரராக மாறிய மாரி செல்வராஜை நேரில் அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல் விரைவில் அவரோடு இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றி உள்ளதாகவும் மாரி செல்வராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்பொழுது பிரபல நடிகர் கார்த்தியை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கு இடையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து "பைசன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

44
Vijay Sethupathi

இப்படி பல முன்னணி நடிகர்கள் மாரி செல்வராஜின் இயக்கத்தில் தொடர்ந்து நடிக்க உள்ள நிலையில், இன்று பிரபல வலைப்பேச்சு சேனலில் அளிக்கப்பட்ட ஒரு தகவலில், பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விரைவில் மாரி செல்வராஜுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்கள். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் என்றும், தற்பொழுது மாரி செல்வராஜ ஒப்புக் கொண்டுள்ள பட பணிகளை முடித்த பிறகு இந்த பட பணிகள் ஆரம்பிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

தனுஷ்ஷின் ரோலக்ஸ் வாட்ச் விலை இத்தன கோடியா? 2 BHK வீடே வாங்கலாம் போல!!

Read more Photos on
click me!

Recommended Stories