தனுஷ்ஷின் ரோலக்ஸ் வாட்ச் விலை இத்தன கோடியா? 2 BHK வீடே வாங்கலாம் போல!!

First Published | Nov 26, 2024, 2:48 PM IST

Dhanush Rolex Watch Price : இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் நடிகர் தனுஷ் அணிருந்த ரோலக்ஸ் வாட்ச் அனைவரது கவனம் ஈர்த்த நிலையில் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தூண்டுகிறது.

Dhanush's Rolex watch

Dhanush Rolex Watch Price Details : தனுஷ் மற்றும் நயன்தாராவின் சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் இருவரும் எதிரும் புதிருமாக ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா சற்று ஓவராக தான் சென்றுள்ளார். ஆம், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமராமல் தனுஷை வெறுப்பேற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரே வரிசையில் அமர்ந்திருந்தார். அதுவும் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார்.

Dhanush's Rolex watch

ஏற்கனவே நயன் தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு 3 பக்கத்திற்கு நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இப்போதைக்கு இருவருமே சைலண்டாக இருக்கின்றனர்.

Tap to resize

Dhanush At Aakash Baskaran Marriage Function

இந்த சர்ச்சைக்குள் நடுவில் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். இசை வெளியீட்டு விழாவிற்கு வேஷ்டி சட்டையில் வரும் தனுஷ் அதே ஃபார்முலாவைத் தான் திருமண நிகழ்ச்சிக்கும் பயன்படுத்தி வருகிறார். திருமண வரவேற்பு என்றால் கோட் சூட்டிலும், திருமணம் என்றால் வேஷ்டி சட்டையில் வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இதுவே படம் ரிலீஸ் என்றால் பேட் சர்ட்டில் சென்று படம் பார்த்து வருகிறார்.

Dhanush's Rolex watch Model and Price

இந்த நிலையில் தான் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் தனுஷ் தன்னுடைய கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் இப்போது அனைவரது கவனம் ஈர்த்துள்ளது. சமீபகாலமாக ரோலக்ஸ் என்ற பெயர் தமிழ் சினிமாவில் அடிபடுகிறது. இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வந்த விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற ஒரு கதாபாத்திரத்தில் கேமியோ கொடுத்திருப்பார்.

Dhanush's Rolex watch

அது தான் அடிக்கடி ரோலக்ஸ் பற்றி பேச வைத்தது. இப்போது தனுஷின் ரோலக்ஸ் வாட்ச் கவனம் ஈர்த்து அதைப் பற்றி ஆராய வைத்துள்ளது. தனுஷ் கட்டியிருந்த வாட்சின் விலை எவ்வளவு இருக்கும்? அதனுடைய மதிப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் ஆராய தொடங்கியுள்ளனர். தனுஷ் தன்னுடைய கையில் கட்டியிருந்த அந்த ரோலக்ஸ் வாட்சின் மாடல் ROLEX
DAY DATE ஆம். ஆடம்பரமான வாட்சான இந்த வகை மாடல் வாட்ச் வாங்குவதற்கு பதிலாக அந்த பணத்தை வைத்து ஒரு 2 அடுக்குமாடி வீடு கூட வாங்கிவிடலாமாம்.

Dhanush Rolex DAY DATE

ROLEX DAY DATE மாடல் சிறப்பம்சம்:

அந்தளவிற்கு காஸ்ட்லியான வாட்சை தான் தனுஷ் தன்னுடைய கையில் கட்டியிருந்திருக்கிறார். ROLEX DAY DATE ஒரு ஆடம்பரமான வாட்ச். கோடீஸ்வரர்கள் மட்டுமே அது போன்ற வாட்ச்களை கட்டியிருப்பார்களாம். அரேபிய எண்களால் அமைக்கப்பட்ட அந்த வாட்ச் ஜொலிக்கும் வகையில் இருக்குமாம். இதனுடைய விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,35,09,000 ஆகும். அதாவது ரூ.1.35 கோடி.

தனுஷ் நிகர சொத்து மதிப்பு:

இவ்வளவு காஸ்ட்லியான வாட்சை தனுஷ் தன்னுடைய கையில் கட்டியிருக்கிறார் என்றால் அவர் எந்தளவிற்கு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவார். அவருடைய நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.230 கோடி ஆகும்.

Latest Videos

click me!