நாகேஷை மிஞ்சிய பிரபு தேவா; 110 நிமிடங்கள் பிணமாக நடித்து சாதனை!!

First Published | Nov 27, 2024, 8:53 AM IST

Prabhu Deva Acted as a corpse 110 minutes in Jolly O Gymkhana Movie : பிரபு தேவா 110 நிமிடங்கள் பிணமாக நடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். வேறு யாரும் படைக்காத இப்படியொரு சாதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Prabhu Deva Acted as a corpse 110 minutes in Jolly O Gymkhana Movie

Prabhu Deva Acted as a corpse 110 minutes in Jolly O Gymkhana Movie : தமிழ் சினிமாவில் இப்போது படங்களின் வருகையும், நடிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறதோ இல்லையோ நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகின்றன. தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டத்தில் சினிமா ரசிகர்களும் தியேட்டருக்கு செல்வதை குறைத்துக் கொண்டு வருவதாக பேச்சு உள்ளது.

Jolly O Gymkhana Movie Release, Prabhu Deva Acting as a Corpse

மேலும் ஓடிடி தளங்களில் படங்கள் பார்ப்பதன் மூலமாக இருக்கும் இடங்களில் இருந்து கொண்டே எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது. செலவும் கம்மி தான் என்ற ஒரு மைண்ட் செட்டுக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள். இப்படியெல்லாம் இருக்கும் போது நல்ல கதை கொண்ட படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ஹிட் கொடுக்கின்றன.

உதாரணமாக லப்பர் பந்து மற்றும் அமரன் படங்களை குறிப்பிடலாம். இந்த நிலையில் தான் கடந்த 22ஆம் தேதி பிரபு தேவா நடித்த ஜாலியோ ஜிம்கானா படம் திரையரங்கிற்கு வந்தது. நடன இயக்குநரான பிரபு தேவா, இயக்குநர், தயாரிப்பாளராக மட்டுமின்றி ஒரு நடிகராகவும் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

Tap to resize

Nagesh, Prabhu Deva Acting 110 Minutes as a Corpse

பிரபு தேவா இயக்குநர்:

விஜய்யின் போக்கிரி முதல் வில்லு, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இப்போது பாலிவுட் படங்களை இயக்கி வருகிறார். அதோடு, Kathanar – The Wild Sorcerer என்ற மலையாள படத்திலும், பிளாஷ்பேக், முசாசி, Wolf ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவான ஜாலியோ ஜிம்கானா படம் 22ஆம் தேதி வெளியானது.

முழுக்க முழுக்க பிளாக் காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், ஒய் ஜி மகேந்திரன், ஜான் விஜய் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். தென்காசியில் பிரியாணி கடை நடத்தி வரும் 4 பெண்கள் ஒரு பிணத்தை(பிரபு தேவா) கைப்பற்றி கொடைக்கானலுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

Magalir Mattum 1994 Movie, Madonna Sebastian, Abhirami

ஜாலியோ ஜிம்கானா பட கதை: மகளிர் மட்டும் 1994 மூவி

அவர்கள் சரியாக கொடைக்கானலுக்கு கொண்டு சென்றார்களா? இல்லையா? இதற்கிடையில் அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தோடு கதை. இந்தப் படம் இதற்கு முன்னதாக 1994 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மகளிர் மட்டும் படத்தின் கதையை போன்று மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக தோன்று. அந்தப் படத்தில் பிணமாக நடித்திருப்பது நாகேஷ் தான். ரேவதி, ஊர்வசி, ரோகினி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் 175 நாட்கள் ஓடி ஹிட் கொடுத்தது.

Prabhu Deva Record in Jolly O Gymkhana

நாகேஷை மிஞ்சிய பிரபு தேவா? 110 நிமிடங்கள் பிணமாக நடித்து சாதனை:

இந்தப் படத்தில் நாகேஷ் ஒரு பகுதியில் மட்டும் பிணமாக நடித்திருப்பார். ஆனால், இப்போது அதை மிஞ்சும் அளவிற்கு நடிகர் பிரபு தேவா தன்னோட நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளார். ஆம், இறந்தவர் போன்று பிணமாக அதுவும் டிராவல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும். பிணமாக 110 நிமிடம் நடித்து சாதனை படைத்துள்ளார்.

ஜாலியோ ஜிம்கானா மூவி ஸ்னீக் பீக் 1 - பிணமாக நடித்த பிரபு தேவா!

Prabhu Deva Acting as a Corpse, Jolly O Gymkhana Movie Release

பிணமாக நடிக்க ஓகே:

படத்தின் கதையை கேட்கும் போதே பிணமாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். அதற்கு உடனே ஓகே சொல்லி படத்திலும் நடித்து கொடுத்துள்ளார். படம் முழுவதும் டிராவலும் பண்ணியிருக்கிறார். இப்படியொரு கதையை எந்த ஹீரோவும் ஏற்று நடித்தது இல்லை. பார்வையற்ற கதாபாத்திரங்களில் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் நடித்திருந்தாலும் பிணமாக நடித்திருப்பது நாகேஷிற்கு பிறகு பிரபு தேவா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாலியோ ஜிம்கானா ஸ்னீக் பீக் 2 - 110 நிமிடங்கள் பிணமாக நடித்து பிரபு தேவா சாதனை

Latest Videos

click me!