என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! வனிதா விஜயகுமார் எமோஷ்னல் பகிர்வு!

First Published | Nov 27, 2024, 2:07 PM IST

என் வாழ்க்கையில் நடந்த இரண்டு திருமண முறிவுக்கும் காரணம், அப்பா தான் என வனிதா விஜயகுமார் எமோஷ்னல் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

Vanitha Vijayakumar Debut Vijay Movie

நடிகை வனிதா விஜயகுமார், அண்மையில் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய இரண்டு விவாகரத்துக்கும் காரணம் அப்பா தான் என கூறியுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய்க்கு ஜோடியாக, வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான வனிதா, எண்ணி நான்கு படங்கள் மட்டுமே நடித்த நிலையில், தன்னுடைய 18 வயதிலேயே ஆகாஷ் என்பவரை 2000-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 7 வருடத்திலேயே ஆகாஷிடம் இருந்து வனிதா விவாகரத்து பெற்று பிரிந்தார்.

Vanitha vijayakumar Son Vijaya Srihari

ஆகாஷ் - வனிதா தம்பதிக்கு விஜயஸ்ரீ ஹரி என்கிற மகனும், ஜோவிகா என்கிற மகளும் பிறந்தனர். ஜோவிகா  வனிதாவுடன் இருக்கும் நிலையில், ஸ்ரீஹரி அவருடைய தந்தையிடம் உள்ளார். மகனை கணவரிடம் இருந்து மீட்க வனிதா போராடிய போதும், மகனின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகிறார்.

அப்பா ஸ்டாலினை விட 3 மடங்கு சொத்துக்கு அதிபதி! ராஜா வீட்டு கன்னுகுட்டி உதயநிதியின் சொத்து மதிப்பு!
 

Tap to resize

Vanitha Vijayakumar and Akash Marriage

அவ்வப்போது வனிதா சமூக வலைதளத்தில், தன்னுடைய மகன் மீதான பாசத்தை வெளிப்படுத்தினாலும், அதை விஜய் ஸ்ரீஹரி கண்டு கொள்வது கூட இல்லை. தன்னிடம் யாராவது அம்மா பற்றி கேள்வி எழுப்பினால் கூட, தன்னுடைய அப்பாவை மட்டுமே அவர் பல விஷயங்களில் குறிப்பிட்டு கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 

Vanith Vijayakumar Second Marriage

ஆகாஷிடம் இருந்து பிரிந்த பின்னர், ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார், அவரிடம் இருந்தும் 5 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இரண்டாவது திருமணம் மூலம் வனிதாவுக்கு ஜெயனித்தா என்கிற மகள் பிறந்த நிலையில், அவர் தந்தையுடன் வாழ்ந்து வந்தாலும், அவ்வப்போது தன்னுடைய அம்மாவை வந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

நாகார்ஜுனா மகன் அகிலின் காதலி ஜைனப் அவரை விட இத்தனை வயது சீனியரா?
 

Vanitha Vijayakumar and Peter Paul issue

வனிதா வாழ்க்கையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அவருடைய மூன்றாவது திருமணம் தான். இது அங்கீகரிக்கப்பட்ட திருமணம் இல்லை என்றாலும், சில மாதங்கள் பீட்டர் பால் என்பவருடன் வனிதா ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், பின்னர் அதுவும் முடிவுக்கு வந்தது. 

ஒருவழியாக இந்த சர்ச்சையில் இருந்து மீண்ட, வனிதா விஜயகுமார் மீண்டும் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கவனம் செலுத்தி வருகிறார். பீல்டு அவுட்டான வனிதாவை மீண்டும் பிரபலம் அடைய செய்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதனை பலமுறை வனிதா விஜயகுமார் தன்னுடைய பேட்டிகளில் கூறியுள்ளார். 

Bigg Boss and Cook With Comali

அம்மா வனிதாவை தொடர்ந்து மகள் ஜோவிகாவும் கடந்தாண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடினார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 'இந்த நிகழ்ச்சியில், அண்மையில் ஆண்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பெண்கள் கொண்டாடும் ஆண்கள் யார்? என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதில் நிலையில் பிரபலங்கள் கலந்து கொண்டு, தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

டபுள் சந்தோஷத்தில் நாகார்ஜூனா; இளைய மகனுக்கு நடந்து முடிந்த நிச்சயம்! Viral Pics!
 

Vanitha Vijayakumar Inspired by Father

அதில் பேசிய வனிதா விஜயகுமார், தான் பார்த்து வியந்த ஆண் என்றால் தன்னுடைய தந்தை என்றும், அவர் இரண்டு குடும்பத்தையும் சாமர்த்தியமாக கையாண்ட விதம் குறித்தும் பெருமையாக பேசி இருந்தார். இது குறித்து அவர் தொடர்ந்து பேசுகையில், "சிறுவயதில் இருந்தே நான் பார்த்து வியந்த மனிதர் என்றால் அது என் தந்தை தான். அவர்தான் இந்த உலகத்திலேயே மிகவும் சிறந்த கணவரும் கூட.

என்னுடைய அம்மாவை என் அப்பா இரண்டாவது திருமணம் தான் செய்து கொண்டார். இந்த திருமணம் அவருடைய முதல் மனைவி சம்மதத்தோடு தான் நடந்தது. இந்த காலத்தில் ஒரு மனைவியோடு ஒரு ஆண் வாழ்வதே மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது, என் அப்பா இரண்டு மனைவிகளுக்கும் சமமான உரிமை கொடுத்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

Vanitha Vijayakumar About Father

என் அம்மா மற்றும் பெரியம்மா இருவருமே ஒற்றுமையாக இருந்ததற்கு முக்கிய காரணம் என் அப்பா தான். பொதுவாக பெண்கள் தான் பல விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். திறமையாக பிரச்சனைகளை கையாள்வார்கள். ஆனால் ஆண்கள் அப்படி கிடையாது. அவர்களால் இரண்டு மூன்று பிரச்சனை வந்தால் ஸ்தம்பித்து போய் நின்று விடுவார்கள். ஆனால் என் அப்பா போன்ற ஒரு சில மனிதர்கள் மட்டுமே மிகவும் சாமர்த்தியமாக இந்த விஷயத்தை ஒரே நேரத்தில் லாவகமாக கையாளுவார்கள். என் அப்பா குடும்பம், குழந்தைகள், வேலை, என அனைத்திலும் மிகச்சிறந்தவராகவே இருந்தார்.

ரஜினி - கமல் படத்துக்கு கூட கிடைக்காத மவுசு! தமிழில் முதலில் ஒரு கோடிக்கு வியாபாரம் ஆன படம் எது தெரியுமா?
 

Arun Vijay and Vijayakumar

என் வாழ்க்கையில் இருக்கும் ஆண்களும் என் தந்தை போல் இருக்க வேண்டும் என நினைத்தேன். என் சகோதரர் அருண் அப்படித்தான் இருக்கிறார். அதனால் கூட எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். அது அமையாததால் மட்டுமே என் வாழ்க்கையில் வந்த ஆண்களுடனான உறவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. ஒரு கட்டத்தில் அது விவாகரத்தில் முடிந்தது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் சில எதிர்பார்ப்புகள் ஒருவருடைய வாழ்க்கையை கூட மாற்றிவிடும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Latest Videos

click me!