
திருமணம் என்றால், ஊரே ஒன்று கூடி...உறவினர்கள் வாழ்த்த, வயிறார உணவருந்தி, மனதார வாழ்த்த வேண்டும் என்பது பெரியோர்கள் சொல். மாடர்ன் கல்சர் என்கிற பெயரில், உணவு முதல் உடை வரை பல மாற்றங்கள் வந்துவிட்டாலும், திருமணம் என்றால் உறவுகள் ஒன்று சேர வேண்டும் என்கிற கலாச்சாரம் மட்டும் தொடர்ந்து வருகிறது.
அதே போல் ஊருக்கே திருமண அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், அதிக பட்சம் 300 முதல் 500 பேருக்கு சொல்லி ஒரு திருமணத்தை நடத்துகிறார்கள். ஆனால் திருநெல்வேலியில் சுமார் 25-ஆயிரம் பேர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ள திருமணம் பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
பிரஷாந்துக்கு இந்த நிலைமையா? 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பே இல்லாமல் வெளியான 'அந்தகன்'!
நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர் எஸ் முருகனின் மகனுக்கும் பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல ராம மூர்த்தியின் பேதி வைஷ்னவி என்பவருக்கும் நடந்துள்ள திருமணம் தான் இப்படி தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஆர்.எஸ்.முருகன் அவருடைய மகன் விஜய ராகுல் என்பவருக்கும் வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் நடந்து முடிந்து சில தினங்கள் ஆனபோதிலும், தற்போது இந்த திருமணத்தை பற்றி தான் பலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இந்த திருமணம் குறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த பிரமாண்ட திருமணத்தை பற்றி மக்கள் அதிகம் பேச முக்கிய காரணம், மணமக்கள் அணிந்திருந்த மாலை. பொதுவாக திருமணங்களில், பூவால் ஆன மாலையை தான் அணிவார்கள். இந்த ஜோடி சற்று வித்தியாசமாக, தங்க பூவால் செய்யப்பட்ட மாலையை அணிந்து ஆச்சர்யப்படுத்தினர்.
அதேபோல் மணமகள் தன்னுடைய தலையில் தங்கத்தால் ஆன முல்லை பூவை சூடி இருந்தார். அவர் அணிந்திருந்த அணைத்து ஆபரணங்களும் முழுக்க முழுக்க தங்கத்தில் ஆனது என கூறப்படுகிறது. இதுதான் இந்த திருமணத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
என்னுடைய 2 விவாகரத்துக்கும் காரணமே அப்பா தான்! வனிதா விஜயகுமார் எமோஷ்னல் பகிர்வு!
மேலும் மணமகள் வைஷ்ணவி திருமணத்தின் போது கட்டி இருந்த புடவையின் மதிப்பு சுமார் 8 லட்சம் என்றும், அதற்கு மேட்சிங்காக அவர் அணிந்திருந்த ஜாக்கெட் ரூ.3 லட்சம் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் திருமணத்தில் மணமகள் கிட்டத்தட்ட 600 சவரன் நகையை அணிந்திருந்தார். ஒரு திருமணம் என்றால் அதை மண்டபத்தில் அல்லது ஹோட்டலில் நடத்துவார்கள். சமீப காலமாக சிலர் பீச் ரெசார்ட்களில் சிறிய செட்டமைத்து, திறந்தவெளியில் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அப்பா ஸ்டாலினை விட 3 மடங்கு சொத்துக்கு அதிபதி! ராஜா வீட்டு கன்னுகுட்டி உதயநிதியின் சொத்து மதிப்பு!
ஆனால் ஆர்.எஸ்.முருகன் குடும்பத்தினர் இந்த திருமணத்தை நடத்த... திருநெல்வேலியில் உள்ள ட்ரேட் சென்டர் பல லட்சம் செலவு செய்து ஒரு திருமண மண்டபத்தையே செட்டாக அமைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர். இந்த திருமணம் நடைபெற நடைபெறும் இடத்தை மக்கள் அனைவருமே மிகவும் பிரமிப்போடு பார்த்து சென்றனர்.
அந்த அளவுக்கு இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக. ஆட்டம் - பாட்டம் கொண்டாட்டத்தோடு நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் மண்டபத்துடைய செட் உள்ளேயும், வெளியேயும், யுனிக்காக அமைத்திருந்தனர்.
அப்பா எழுதி; அம்மா நடித்த பாடலை க்யூட்டாக பாடிய விக்கி - நயன் மகன்கள்
அதேபோல் இந்த திருமணத்தில், பல்வேறு கிராமிய கலைகளின் நடனங்கள் ஆடியது திருமணத்திற்கு வந்தவர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது. மேலும் திரைப்பட பின்னணி பாடகர்கள் எஸ் பி சரண், சைந்தவி, சூப்பர் சிங்கர் பாடகர்கள், உள்ளிட்ட பலர் இனிமையான பாடல்களை பாடி விருந்தினர்களை குதூகலம் செய்துள்ளனர்.
இந்த திருமணத்தின் கேட்டரிங் பொறுப்பு மதம்பட்டி ரங்கராஜ் தான் செய்திருந்தார். திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கரி விருந்து கொடுக்கப்பட்டது. இந்த திருமணத்தில், அரசியல்வாதிகள், நடிகர் சூரி, எதிர்நீச்சல் பட இயக்குனர் திருச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி உள்ளனர். திருமணம் என்றால் இப்படித்தான் நடத்தனும் என திருநெல்வேலியை மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இந்த திருமணம் நடந்து முடித்துள்ளார் ஆர்.எஸ்.முருகன்.