கங்குவா கதறவிட்டது பத்தாதா! சூர்யாவின் அடுத்த படத்துக்கு ‘க’ டைட்டிலா?

First Published | Nov 28, 2024, 7:42 AM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Karthik Subbaraj, Suriya

நடிகர் சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கிடைத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதை கங்குவா படத்தின் மூலம் பெற்றுவிடலாம் என அந்த படத்தை மலைபோல் நம்பி இருந்தார் சூர்யா. ஆனால் கங்குவா படம் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்துவிட்டது. இதனால் அவரின் வெற்றிக்கான தேடல் இன்னும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் சூர்யா நடித்துள்ள படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.

Suriya 44

தற்காலிகமாக சூர்யா 44 என அழைக்கப்படும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... எத பத்தியும் கவலயில்ல – சூர்யா 45 படத்தை பூஜையோடு தொடங்கிய ஆர்ஜே பாலாஜி, சூர்யா!

Tap to resize

Suriya 44 movie

சூர்யா 44 படத்தின் தலைப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதன்படி இப்படத்திற்கு கல்ட் என பெயரிட திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஏற்கனவே கங்குவா தந்த அடி பத்தாதா... மீண்டும் க டைட்டிலா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க அந்த கல்ட் என்கிற தலைப்புக்கும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த டைட்டிலை நடிகர் அதர்வா ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறாராம்.

Suriya 44 movie Title Leaked

அந்த டைட்டிலை அதர்வாவிடம் இருந்து வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவர் ஓகே சொன்னால் தான் அந்த டைட்டில் சூர்யா படத்திற்கு கிடைக்கும். ஒருவேளை அவர் நோ சொல்லிவிட்டால் வேறு தலைப்புடன் தான் சூர்யா 44 திரைப்படம் வெளியாகும். கங்குவா தோல்வியால் செம அப்செட்டில் இருக்கும் நடிகர் சூர்யாவுக்கு கல்ட் திரைப்படம் வெற்றியை தேடித் தந்து அவரின் கம்பேக் படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரசிகர்களின் பொறுமையை சோதிக்க போகிறதா புஷ்பா 2? மலைக்க வைக்கும் ரன்னிங் டைம்

Latest Videos

click me!