ரஜினிகாந்தின் பாசமலர்; சூப்பர்ஸ்டார் தங்கச்சியா இது! வைரலாகும் குழந்தைப்பருவ புகைப்படம்

Published : Nov 28, 2024, 10:40 AM ISTUpdated : Nov 28, 2024, 12:45 PM IST

Actress Childhood Photos : கிரிஞ்ச் நடிகை என கிண்டலடிக்கப்பட்ட ஒருவர் தன்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றிருக்கிறார், அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்களை பார்க்கலாம்.

PREV
19
ரஜினிகாந்தின் பாசமலர்; சூப்பர்ஸ்டார் தங்கச்சியா இது! வைரலாகும் குழந்தைப்பருவ புகைப்படம்
Actress Childhood Photos

வாரிசு நடிகை என்கிற இமேஜ் உடன் சினிமாவுக்குள் நுழைந்த நடிகை ஒருவர், ஆரம்பத்தில் ரசிகர்களால் கிரிஞ்ச் நடிகை என ட்ரோல் செய்யப்பட்டு, பின்னர் தன்னுடைய திறமையால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அந்த நடிகை, தான் கதையின் நாயகியாக நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்று அசத்தினார். அந்த நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

29
Keerthy suresh Childhood Photos

அந்த நடிகை வேறுயாருமில்லை... அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் தங்கச்சியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தான். இவரின் தந்தை சுரேஷ் மேனன் சினிமாவில் தயாரிப்பாளராக பணியாற்றினார். அதேபோல் இவரின் தாய் மேனகா, ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தாய், தந்தை இருவருமே சினிமா பின்புலம் உள்ளவர்கள் என்பதால் கீர்த்திக்கு சினிமாவில் ஈஸியாக அறிமுகமாக முடிந்தது.

39
Keerthy suresh Rare Childhood Photos

ஆனால் பெற்றோர் பெயரை காப்பாற்ற அவர் படாதபாடு பட்டார். தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படம் முதல் வெற்றியை தேடித்தந்தது. இந்த காம்போ ஹிட்டானதால் இருவரும் ரெமோ படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர்.

49
Keerthy suresh Unseen Childhood Photos

இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக தொடரி, விஜய்யுடன் பைரவா, விஷால் ஜோடியாக சண்டைக்கோழி 2, விக்ரமுடன் சாமி ஸ்கொயர், சூர்யாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து நடித்தாலும் அப்படங்களெல்லாம் வரிசையாக பிளாப் ஆகின. அதில் கீர்த்தியின் நடிப்பும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, அவரை கிரிஞ்ச் நடிகை என்று ட்ரோல் செய்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... நீங்க சொன்னது சரி தான்; 15 வருட காதலை வெளிப்படையா அறிவித்த கீர்த்தி சுரேஷ்; இனி டும் டும் டும்!

59
Keerthy suresh With Her Mom

தன்னை கிரிஞ்ச் நடிகை என கிண்டலடித்தவர்கள் மூஞ்சில் கரியை பூசும் விதமாக அவர் நடித்த படம் தான் மகாநடி. சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சாவித்ரியாக நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கீர்த்தியின் நடிப்பு பர்ஸ்ட் கிளாஸ் ஆக இருந்தது.

69
Keerthy suresh with her Father

அவரின் இந்த விடாமுயற்சிக்கு கிடைத்த பரிசு தான் தேசிய விருது. மகாநடி படத்திற்காக அவர் தன் முதல் தேசியவிருதை வென்றார். கோலிவுட்டில் முன்னணி நாயகிகளாக இருக்கும் நயன்தாரா, திரிஷா ஆகியோருக்கு எட்டாக்கனியாக இருக்கும் தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே வென்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

79
Keerthy suresh Cute Childhood Photos

தேசிய விருது வென்ற பின்னர் தன்னுடைய ரூட்டை மாற்றிய கீர்த்தி தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு அந்த படங்கள் கைகொடுக்கவில்லை. தென்னிந்திய திரையுலகில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார் கீர்த்தி.

89
Keerthy suresh

இந்தியில் அவர் அறிமுகமாகும் முதல் படத்தை இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார். பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படம் தமிழில் விஜய் நடித்து ஹிட்டான தெறி படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் டிசம்பர் மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

99
Keerthy suresh Lover Antony Thattil

பாலிவுட்டில் அறிமுகமான கையோடு திருமணமும் செய்துகொள்ள உள்ளார் கீர்த்தி சுரேஷ். அவருக்கு வருகிற டிசம்பர் 11-ந் தேதி கோவாவில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது. தன்னுடைய 15 வருட காதலானான ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி கரம்பிடிக்க உள்ளார். இந்த நிலையில் தான் அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ரஜினியின் லக்கி சார்ம்; திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து பெற்றவர்! யார் இந்த பிரபலம்?

Read more Photos on
click me!

Recommended Stories