மீண்டும் இணைகிறார்களா ஆர்த்தி - ஜெயம் ரவி? சமாதான பேச்சு வார்த்தையில் நடந்தது இது தான்!

First Published | Nov 28, 2024, 11:28 AM IST

நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நேற்று நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் போது என்ன நடந்தது? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
 

Jayam Ravi Divorce Case

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து, தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ளவர் ஜெயம் ரவி. இவர் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்ததால், இந்த படத்தின் பெயரை இவருடைய அடையாளமாக மாறியது. ஜெயம் படத்தை தொடர்ந்து இவர் நடித்த 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'மழை', 'உனக்கும் எனக்கும்', 'தீபாவளி', 'சந்தோஷ சுப்பிரமணியம்', 'தாம் தூம்', 'பேராண்மை' போன்ற படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்தன.

Jayam Ravi Choosing Different Concept Movies

மேலும் தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்த 'தனி ஒருவன்' திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்கள் மத்தியில், மிருதன் படத்தின் மூலம் ஜாம்பி கதையிலும், வனமகன் படத்தில் காட்டுவாசியாகவும், டிக் டிக் படத்தில் சயின்ஸ் பிக்சன் படமாகவும், பூமி படத்தில் சயின்டிஸ்ட் ஆகவும், பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாகவும் நடித்து பிரமிக்க வைத்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் விவாகரத்து வழக்கு! நீதி மன்றத்தின் தீர்ப்பு என்ன?
 

Tap to resize

Actor Jayam Ravi upcoming Movies

மேலும் விரைவில் இவர் நடித்த ஜீனி, காதலிக்க நேரமில்லை, போன்ற படங்கள் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், ஜெயம் ரவி வில்லனாக  உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்  இந்த ஆண்டு இவர் நடித்த சைரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், பிரதர் திரைப்படம் தீபாவளி ரேசில் இணைந்ததால்... அமரன் படத்தின் முன்பு ஜொலிக்க முடியாமல் போனது.

இவருடைய திரையுலக வாழ்க்கை ஒருபுறம் பிசியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையில் குடும்ப நலன் கருதி இந்த முடிவை எடுப்பதாக ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.

Jayam ravi Statement

இந்த அறிக்கைக்கு பின்னர் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், இது முழுக்க முழுக்க ஜெயம் ரவி சுயமாக எடுத்த முடிவு என்றும், இது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்பது போல் கூறியிருந்தார். அதேபோல் இந்த அறிகையால் தானும் தன்னுடைய பிள்ளைகளும் செய்வது அறியாமல் தவித்து வருவதாகவும் ஆர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இதற்கு ஜெயம் ரவி தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில், ஆர்த்தி மீண்டும் தன்னுடைய கணவர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழ்வதில் விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார். நீதிமன்றம் தனக்கான நியாயத்தை தெரிவிக்கும் என்கிற நம்பிக்கையும் இவருடைய அறிக்கையில் வெளிப்பட்டது.

தங்க மாலை; 600 சவரன் நகை! நெல்லையை திரும்பி பார்க்க வைத்த வேல ராமமூர்த்தி பேத்தியின் திருமணம்!

Jayam Ravi and Aarti Divorce Case

இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி தரப்பில் இருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 15ஆம் தேதி... ஜெயம் ரவி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். ஆனால் ஆர்த்தி உடல்நல பிரச்சனை காரணமாக தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று கூறி, காணொளி காட்சி மூலம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சமரச தீர்வு மையத்தில், இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் வழக்கு நவம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இருவரும் சமரச தீவு மையத்தில் நேற்று ஆஜராகி சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இருவருக்கும் இடையே எவ்வித சமரசமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் 7-ஆம் தேதிக்கு இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!