Top 10 Tamil Serial TRP : வார வாரம் சன் டிவி சீரியல்கள் டிஆர்பியில் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இந்த வாரம் 5 விஜய் டிவி சீரியல்கள் அதிரடியாக டாப் 10ல் இடம்பிடித்துள்ளன.
சின்னத்திரை சீரியல்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன்காரணமாக சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்கள் அதிகளவிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களுக்கு தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ளதால் அதை வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகின்றனர். சீரியல்களுக்கு எந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது என்பதை டிஆர்பி மூலம் கண்டறியப்படுகிறது. அந்த வகையில் 47-வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
24
Top 10 serial TRP
அதில் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் விஜய் டிவி சீரியல்கள் மளமளவென முன்னேறி உள்ளன. கடந்த வாரம் இரண்டு விஜய் டிவி சீரியல்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த வாரம் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களை பின்னுக்கு தள்ளி ஐந்து விஜய் டிவி சீரியல்கள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்று உள்ளன. அதிலும் கடைசி ஐந்து இடங்களை விஜய் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அதன்படி 10-வது இடத்தில் ஆஹா கல்யாணம் சீரியல் உள்ளது. இந்த சீரியலுக்கு 5.98 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.
அடுத்ததாக 9-வது இடத்தில் சின்ன மருமகள் சீரியலும், 8வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் உள்ளன. இதில் சின்ன மருமகள் சீரியலுக்கு 6.02 புள்ளியும், பாக்கியலட்சுமி சீரியலுக்கு 6.22 புள்ளியும் கிடைத்துள்ளது. விஜய் டிவியின் டாப் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் சிறகடிக்க ஆசை ஆகியவை முறையே 7 மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளன. இதில் 7-ம் இடத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.43 டிஆர்பி புள்ளிகளையும், 6-ம் இடத்தில் உள்ள சிறகடிக்க ஆசை சீரியல் 7.64 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
44
Kayal Serial
முதல் ஐந்து இடங்கள் சன் டிவி சீரியல்களுக்கு தான் கிடைத்துள்ளது. இதில் சுந்தர் சீரியல் 8.81 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. நான்காம் இடத்தை 8.89 டிஆர்பி புள்ளிகளை பெற்று இராமாயணம் மற்றும் மருமகள் ஆகிய சீரியல்கள் பகிர்ந்துகொண்டுள்ளன. மூன்றாம் இடம் மூன்று முடிச்சு சீரியலுக்கு கிடைத்துள்ளது. அதற்கு 9.95 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. அதேபோல் இரண்டாம் இடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியல் 10.03 புள்ளிகளையும், முதலிடத்தில் உள்ள கயல் சீரியல் 10.34 டிஆர்பி புள்ளிகளையும் பெற்றிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.