இந்த சூழலில் நாளை நவம்பர் 29ம் தேதி ஆர்.ஜே பாலாஜியின் "சொர்க்கவாசல்" என்கின்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கி இருக்கிறது. மிகவும் அருமையான ஒரு கதைகளத்தில் இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நேர்த்தியாக நடித்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் இந்த நிலையில், "நாளைய இயக்குனர்" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் கிருஷ்ணகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறார்.
அதாவது சைதாப்பேட்டை கிளைச் சிறையில் பல கைதிகளிடம் இருந்து தான் பெற்ற கருத்துக்களை கொண்டு "கிளைச்சிறை" என்னும் தலைப்பில் ஒரு கதையாகத் தான் எழுதியதாகவும். அதை ஒரு முழு ஸ்கிரிப்டாக பிரபல ட்ரீம் வாரியர் நிறுவனத்திடம் கொடுத்த பொழுது, சில நாட்கள் கழித்து இப்படம் தங்களுக்கு உகந்ததாக இல்லை என்று மெயில் மூலம் தனக்கு ரிப்ளை வந்ததாக கூறியிருக்கிறார் கிருஷ்ணகுமார். மேலும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு, இப்போது டீம் வாரியர் நிறுவனம் மற்றும் ஆர்.ஜே பாலாஜி மீது குற்றம் சாட்டியுள்ளார்.