"நீங்க 200 கோடினா; நான் 2000 கோடி" மீண்டும் விஜயை வம்பிழுக்கும் சீமான்!

First Published | Nov 28, 2024, 7:49 PM IST

Seeman Vs Vijay : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்கு பிறகு, மீண்டும் இப்பொழுது பொதுவெளியில் பிரபல நடிகர் விஜய் குறித்து பேச தொடங்கி இருக்கிறார் சீமான்.

TVK Vijay

இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர் அறிவிப்பை நடிகர் தளபதி விஜய் வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரண்டு திரைப்படப் பணிகளை முடித்த பிறகு, முழுநேர அரசியல் தலைவராக களமிறங்க உள்ளதாகவும், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். உண்மையில் அவருடைய திரையுலக ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய வருத்தத்தை தந்தாலும், தங்களுடைய அபிமான நட்சத்திரம் அரசியலுக்குள் நுழைவது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையே தந்தது.

15 நாளில் ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட 'கங்குவா'! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!

TVK Maanadu

இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வெகு பிரம்மாண்டமாக கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டிகள் நடைபெற்று முடிந்தது. அந்த மாநாடு நடந்து முடிந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது என்றாலும் கூட, இன்றளவும் அந்த மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அவர் பேசிய விஷயங்கள் பெரும் அதிர்வலைகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தான் ஏற்கனவே அரசியல் தலைவர் விஜயை ஆதரித்து வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகிய இருவரும் இப்போது அவரை மிகப் பெரிய அளவில் எதிர்த்து வருகின்றனர். 

Tap to resize

Rajini

சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று சந்தித்து திரும்பினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ரஜினியை சந்திப்பதே அரசியல் தான். நாங்கள் பேசியதும் அரசியல் குறித்து தான். திரையுலகம் குறித்தும் பல விஷயங்களை பேசினோம். இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து பேசிக்கொண்ட இந்த விஷயம் எதுவாக இருந்தால் உங்களுக்கு என்ன. அவர் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றால் அரசியல் களத்தில் நான் சூப்பர் ஸ்டார் ஆகவே எங்களுடைய பேச்சு ஆக்கப்பூர்வமானது அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

politician seeman

மேலும் கடந்த சில நாட்களாக தளபதி விஜய் குறித்து பெரிய அளவில் பேசாமல் இருந்த சீமான் இன்று நடைபெற்ற ஒரு அரசியல் கூட்டத்தில் பேசிய பொழுது "200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததாக பெருமைப்படுகிறார்கள். ஆனால் 2000 கோடி கொடுக்கிறேன் எங்கள் கட்சியில் சேர்ந்து விடு என்று அழைத்தும் நான் போகவில்லை. பொழுது விடிந்தாலே மீடியா முழுக்க என்னைப் பற்றி தான் பேசுகிறார்கள். நான் அழிவதில் அவர்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம் என்று தெரியவில்லை. அப்படி நான் அழிவதாக இருந்தால், அனைவரையும் அழித்துவிட்டு தான் போவேன் என்று சீமான் பேசியிருக்கிறார்..

30 ரூபாய்க்கு எச்சல் இலை எடுத்து கஷ்டப்பட்ட விஜய் டிவி புகழின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Latest Videos

click me!