விரைவில் ஆரம்பமாகும் பிக்பாஸ் 7! ஆடிஷனில் கலந்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றி கசிந்த தகவல்.!

First Published | Jun 24, 2023, 6:50 PM IST

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 7 விரைவில் துவங்க உள்ளதாகவும், இதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களுக்கு ஆடிஷன் தற்போது நடந்து வரும் நிலையில், அவர்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு மற்றும் நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. 

தனுஷுக்கு ஜோடியாகிறாரா அமலா பால்? எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் வெளியான தகவல்!

Tap to resize

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டுள்ள சில பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக, பல பிரபலங்களின் பெயர்கள் போட்டியாளர்கள் லிஸ்டில் கிசுகிசுக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தற்போது இந்த லிஸ்டில் இணைந்துள்ள பிரபலங்கள் யார்... யார்... என்பதை பார்க்கலாம்.
 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் லிஸ்டில், முதலில் உள்ளவர் ரேகா நாயர். தொகுப்பாளராகவும்,  சீரியல் நடிகையாகவும் பிரபலமான இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். குறிப்பாக பயில்வான் ரங்கநாதன் தன்னை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவருடன் நேருக்கு நேர் நடுரோட்டிலேயே சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இவர் பிக் பாஸ் வீட்டின் உள்ளே வந்தால், சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது என நம்பலாம்.

2000-திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடல்களை தகனம் செய்த மணிமாறனுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரஜினிகாந்த்!
 

இவரை தொடர்ந்து, போட்டியாளர் லிஸ்டில் உள்ள மற்றொரு பிரபலம் நடிகை உமா ரியாஸ் கான். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டவர், என்பதால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவரின் மகன் ஷாரிக் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டும் இன்றி, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல்,  விஜய் டிவி தொகுப்பாளராக பிரபலமான பாவனா பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் பிரியங்கா கலந்து கொண்ட நிலையில், பாவனா இந்த சீசனில் போட்டியாளராக மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டே விலகி விடுவேன் என சவால் விட்ட த்ரிஷா! பயில்வான் கூறிய தகவல்!

இவரை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 7-க்கான ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளார், விஜய் டிவி தொகுப்பாளரான மாகாபா. இவர் தொகுப்பாளர் என்பதை தாண்டி, திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ள நிலையில், மீண்டும் படவாய்ப்புகளுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.

இவரை தொடர்ந்து இந்த லிஸ்டில் உள்ள போட்டியாளர் விஜய் டிவியில் ஸ்டாண்ட் அப்  காமெடியனாக பிரபலமான சரத் தான். கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவருக்கு தற்போது வரை, சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் அமையாததால்,  பட வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற நோக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்! லால் சலாம் மற்றும் 170-வது படத்திற்கு சேர்த்து எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

தற்போது வரை இந்த 5 பிரபலங்கள் பெயர்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலைகள், விரைவில் அடுத்தடுத்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மற்ற போட்டியாளர்கள் பெயர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!