அட்ஜஸ்மெண்ட் செய்தால் பட வாய்ப்பு... திரையுலகில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனம்திறந்த நயன்தாரா

Published : Feb 01, 2023, 07:47 AM ISTUpdated : Feb 01, 2023, 07:55 AM IST

திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, திரையுலகில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். 

PREV
15
அட்ஜஸ்மெண்ட் செய்தால் பட வாய்ப்பு... திரையுலகில் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனம்திறந்த நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னுடையை காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு திருமணமான மூன்றே மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைகளும் பிறந்தன.

25

வாடகைத் தாய் முறையில் அந்த இரட்டை குழந்தைகளை அவர்கள் பெற்றுக்கொண்டனர். இரண்டு குழந்தைகளுக்கும் உயிர், உலகம் என தனித்துவமான பெயர்களை சூட்டி இருக்கிறது நயன் - விக்கி ஜோடி. தற்போது குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா. அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வருவதால், சினிமாவுக்கு சற்று ரெஸ்ட் விட்டுள்ளார்.

35

விரைவில் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் நயன். அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. அவர் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். இதுதவிர ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இறைவன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அஹமத் இயக்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... இது கர்ஜிக்கும் நேரம்: தளபதி67 படத்தில் இணைந்த ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்!

45

இவ்வாறு திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, திரையுலகில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதன்படி அட்ஜஸ்மெண்ட் செய்தால் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க வாய்ப்பு தருவதாக தன்னிடம் கூறியதாகவும், அப்படி ஒரு வாய்ப்பே வேண்டாம் என நிராகரித்துவிட்டதாகவும் நடிகை நயன்தாரா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

55

மேலும் தனது நடிப்பு திறமையின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அந்த பேட்டியில் நயன்தாரா தெரிவித்து இருக்கிறார். திரையுலகில் நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றி பல்வேறு நடிகைகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாராவும் இதுபோன்ற மோசமான அனுபவங்களை எதிர்கொண்டு இருக்கிறார் என்பது பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே உள்ளது.

இதையும் படியுங்கள்... விவாகரத்து ஆனவரை திருமணம் செய்துகொண்டது ஏன்? - முதன்முறையாக மவுனம் கலைத்த ஹன்சிகா

Read more Photos on
click me!

Recommended Stories