தளபதி67
தளபதி67 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் விஜய் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி 2 ஆம் தேதியே தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மூணாறு ஆகிய பகுதிகளில் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
தளபதி67
இதுவரையில், தளபதி67 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து வெறும் தகவலாகவே வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று தயாரிப்பு நிறுவனம், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அதில், அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு இந்தப் படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுக்கின்றனர்.
கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற டீம்: தளபதி67ல் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
சஞ்சய் தத்
இதுகுறித்த அறிவிப்பு போஸ்டரில், தளபதி 67 கதை கேட்டு சஞ்சய் தத் என்ன சொன்னார் என்பதை பதிவிட்டுள்ளனர். அதன்படி “தளபதி 67 படத்தின் ஒன் லைன் கேட்டதுமே இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த பயணத்தை தொடங்க ஆவலோடு உள்ளேன்” என்று சஞ்சய் தத் கூறியுள்ளார்.
பிரியா ஆனந்த்
தளபதி67 படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. நம்பமுடியாத நடிகர் மற்றும் நடிகைகளுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக மிர்ச்சி சிவா, சிவகார்த்திகேயன், விமல், கௌதம் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த பிரியா ஆனந்த் முதல் முறையாக தளபதி விஜய் இணைந்து தளபதி67 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாண்டி மாஸ்டர்
இந்தப் படத்தில் என்னவொரு ஆச்சரியமான விஷயம் என்றால், சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இதுவரையில், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து, பாடல்களுக்கு நடனம் அமைத்துக் கொண்டிருந்த சாண்டி மாஸ்டர் தளபதி67 படத்தில் இணைந்துள்ளார். எனக்கு நானே என்னை ஒரு நடிகராக பார்ப்பது எல்லாம் புதுசு. நான் எவ்வளவு வியப்பாக இருக்கிறேன் என்று வெறும் வார்த்தையால் விவரிக்க முடியாது என்று சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
மன்சூர் அலிகான்
மின்சார கண்ணா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், தேவா மற்றும் வசந்த வாசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மன்சூர் அலி கான் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யாணும் இணைந்தேன், தளபதி67ல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்தெழு திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே என்று பதிவிட்டுள்ளார்.
மிஷ்கின்
யூத் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்போது எப்படி அண்ணா என்று அழைத்தாரோ அதே போன்று தான் இப்போதும் அழைக்கிறார். இந்த உடம்பை வைத்தே அவருடன் சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறேன். வாய் எல்லாவற்றையும் அடித்து உடைத்துவிட்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் எந்தவித பதற்றமும் இல்லாமல் படத்தை தெளிவாக இயக்குகிறார். ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக எடுத்துக் கொடுக்கிறார். தளபதி67 படத்தின் மூலமாக உங்கள் அனைவரையும் திரையரங்கில் சந்திக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேத்யூ தாமஸ்
மேத்யூ தாமஸ் கூறியிருப்பதாவது: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் படத்தில் நடிக்கிறேன். இதைவிட ஒரு சிறந்த அறிமுக தமிழ் படத்தை கேட்டிருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன்
கேமரவுக்கு முன் இந்தப் படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் கௌதம் மேனன் இருவரும் இணைவது முதல் முறை. இதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய், யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது இருவரும் தளபதி67 படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜூன்
ஒரு வலிமையான தளபதி67 என்ற கப்பலில் ஏறுவது என்பது கேப்டன் எல்கே மூலமாக அற்புதமாக வழிநடத்தப்பட்டு, கட்டளையிடப்பட்டது. இது கர்ஜிக்கும் நேரம் என்று ஆக்ஷன் கிங் அர்ஜூனின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், எல்கே என்பது தயாரிப்பாளர் லலித் குமாரை குறிப்பதாக சொல்லப்படுகிறது.
தளபதி67
இதோடு இன்றைய தளபதி67 படத்தின் அப்டேட் முடிந்துள்ளது என்றும், நாளை சந்திப்போம் என்று தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி67 படத்தில் கமல் ஹாசன், நிவின் பாலி, சூர்யா, விக்ரம் ஆகியோர் நடிப்பதாக imdb என்ற இணையதளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.