தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். அவரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ராஜா ராணி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து மெர்சல், பிகில், தெறி என விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து நட்சத்திர இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார் அட்லீ.
இதையடுத்து அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஜவான் திரைப்படம். இப்படம் மூலம் இந்தியில் இயக்குனராக எண்ட்ரி கொடுத்துள்ளார் அட்லீ. இப்படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... விவாகரத்து ஆனவரை திருமணம் செய்துகொண்டது ஏன்? - முதன்முறையாக மவுனம் கலைத்த ஹன்சிகா
இந்த ஆண்டு தொடக்கத்தில் தனக்கு டபுள் சந்தோஷம் காத்திருப்பதாக கூறி இருந்தார் அட்லீ. அதில் ஒன்று ஜவான் படத்தின் ரிலீஸ் மற்றொன்று தனது மனைவி பிரியாவுக்கு குழந்தை பிறக்க உள்ளது என தெரிவித்திருந்தார். எதிர்பார்த்தபடியே தற்போது அட்லீயின் மனைவி பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் செம்ம சந்தோஷத்தில் உள்ளார் அட்லீ.