நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பத்து தல. ஒபிலி கிருஷ்ணா இயக்கி வரும் இப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன், மனுஷ்யபுத்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். பத்து தல படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முழுவதுமாக நிறைவடைந்துவிட்டது. தற்போது டப்பிங் உள்ளிட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பத்து தல படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. அதன்படி அப்படத்தின் முதல் பாடலை தான் அன்று வெளியிட உள்ளனர். நம்ம சத்தம் என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து பாடியும் உள்ளார். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார்.