கிளாமருக்கு லீவு விட்டு... பட்டுச் சேலையில் குடும்ப குத்து விளக்காக மிளிரும் பூஜா ஹெக்டே - வைரலாகும் போட்டோஸ்

First Published | Jan 31, 2023, 4:41 PM IST

பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே, பட்டுச் சேலையில் அழகு தேவதை போல் மிளிரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்து கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸான முகமூடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படம் படுதோல்வி அடைந்ததால் அதன்பின் தமிழ் படங்களுக்கு டாடா காட்டிவிட்டு டோலிவுட் பக்கம் ஒதுங்கினார் பூஜா.

அங்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், குறுகிய காலத்திலேயே உச்ச நடிகை ஆனார். இவர் நடித்த படங்கள் எல்லாம் தொடர்ந்து ஹிட் ஆனதால் ராசியான நடிகையாகவும் உருவெடுத்தார் பூஜா ஹெக்டே.

Tap to resize

டோலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜாவுக்கு 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார் பூஜா. கடந்தாண்டு வெளியான அப்படம் படுதோல்வி அடைந்ததால், கோலிவுட் பக்கமே தலைகாட்ட கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் பூஜா ஹெக்டே.

இதையும் படியுங்கள்... 'தளபதி 67' படத்தில் இணைந்த யாரும் எதிர்பாராத ஹீரோயின்! இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..!

தற்போது இந்தியில் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும், தமிழில் தமன்னா நடித்த கேரக்டரில் தான் பூஜா ஹெக்டே அதன் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இப்படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

வழக்கமாக கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தும் பூஜா ஹெக்டே, தற்போது பட்டுச் சேலையில் அழகு தேவதையாய் மிளிரும் வகையில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில் அவர் புதுமணப் பெண் போல் காட்சியளிப்பதால், அவருக்கு திருமணமா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மையில், அது அவரது அண்ணனின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள். பூஜா ஹெக்டேவின் சகோதரரின் திருமணம் கடந்த வாரம் நடந்தது. அதில் தான் பட்டுச் சேலை அணிந்து கலந்துகொண்டார் நடிகை பூஜா ஹெக்டே.

இதையும் படியுங்கள்... செம்ம கியூட்... முதல் முறையாக வெளியான பிரியங்கா சோப்ரா மகள் மால்டி மேரி புகைப்படம்! குவியும் லைக்ஸ்!

Latest Videos

click me!