விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது. இருப்பினும் இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த படக்குழு தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், மூன்றாவது அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தளபதி 67 படத்தில் பிரபல நடன இயக்குனரும், பிக்பாஸ் பிரபலமுமான சாண்டி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பிக்பாஸ் 3-வது சீசனில் பைனல் வரை சென்று வெற்றிவாய்ப்பை நழுவவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்த சாண்டி ஏற்கனவே 3:33 என்கிற பேய் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.