தமிழ் திரையுலகில் பப்ளி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமயத்திலேயே காதல் சர்ச்சையிலும் சிக்கினார் ஹன்சிகா. வாலு படத்தில் நடித்தபோது சிம்புவுக்கு ஹன்சிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் அந்த படத்தை போல் இவர்களது காதலும் தோல்வியில் முடிந்தது.
ஹன்சிகா என்றாலே பப்ளி ஹீரோயின் என்ற பெயர் இருந்து வந்த நிலையில், திடீரென உடல் எடையை குறைத்து அதிர்ச்சி அளித்தார் ஹன்சிகா. உடல் எடையை குறைத்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. இதனால் சுதாரித்துக் கொண்ட ஹன்சிகா, இளம் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க தயார் என அறிவித்தார். இதையடுத்து தெலுங்கில் ஹன்சிகாவும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் ஹன்சிகா. இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும்போதே கடந்தாண்டு நடிகை ஹன்சிகா திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இவர் சோஹைல் கத்தூரியா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... நம்ம சத்தம் கேட்க ரெடியா..! சிம்புவின் பிறந்தநாளுக்கு இசை விருந்து கொடுக்கும் ‘பத்து தல’ படக்குழு
இப்படி ஹன்சிகாவின் திருமணம் ஜாலியாக நடந்து முடிந்தாலும், அவர் திருமணம் செய்துகொண்ட சோஹைல் கத்தூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் கத்தூரியா முதலில் திருமணம் செய்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின்னர் தான் ஹன்சிகா உடன் பழக்கம் ஏற்பட்டு அவரை கரம்பிடித்துள்ளார் சோஹைல் கத்தூரியா.
விவாகரத்து ஆனவரை ஹன்சிகா திருமணம் செய்துகொண்டது ஏன்? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்து வந்தது. இதுகுறித்து பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்த ஹன்சிகா, தற்போது முதன்முறையாக அதுகுறித்து மனம்விட்டு பேசி உள்ளார். நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான அதற்கான டீசரில், ஹன்சிகா தனது அம்மாவிடம் பேசும்போது, நீ தான் எனக்கு அடிக்கடி சொல்லி இருக்கிறாய். யாருடைய கடந்த காலத்தை பற்றி பார்க்கக் கூடாது என்று உனக்கு ஓகே என்றால் எனக்கு அது போதும் என்று கண்கலங்கியபடி ஹன்சிகா பேசியுள்ளார். இதில் சோஹைல் கத்தூரியாவின் கடந்த காலத்தை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பதை ஓப்பனாக சொல்லி இருக்கிறார் ஹன்சிகா.
இதையும் படியுங்கள்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... பிக்பாஸ் பைனலில் தோற்றவருக்கு தளபதி 67-ல் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்