Published : Aug 11, 2022, 12:46 PM ISTUpdated : Aug 11, 2022, 08:48 PM IST
புகைப்படத்தில் யாஷின் சகோதரி நந்தினி தனது சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவதும் , உடன் பிறந்த இருவரும் சடங்கு செய்வதையும் காண முடிகிறது. தற்போது யாஷின் பதிவு வைரல் ஆகி வருகின்றன.
கேஜிஎப் நாயகன் ராக்கி பாய் தனது சகோதரி நந்தினியுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடியுள்ளார். இது குறித்தான புகைப்படங்களை தனது சமூகம் வலைத்தளத்தில் பதிவிட்ட யாஷ், அந்த பதிவில் உடன்பிறப்புகள் வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் ஆதரவால் பிணைக்கப்பட்டவர்கள். அனைவருக்கும் இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்..
24
kgf Yash raksha bandhan celebration
இந்த புகைப்படத்தில் யாஷின் சகோதரி நந்தினி தனது சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவதும் , உடன் பிறந்த இருவரும் சடங்கு செய்வதையும் காண முடிகிறது. தற்போது யாஷின் பதிவு வைரல் ஆகி வருகின்றன.
சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த யாஷின் கேஜிஎப் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. உலகநாயகனாக மாறிவிட்ட ராக்கி பாய் இரண்டே படங்களில் தான் நாயகனாக தோன்றியுள்ளார். முதல் பணம் கேஜிஎப், இரண்டாவது படம் கேஜிஎப் அத்தியாயம் 2/ முதல் பாகத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நாயகன் நான்காண்டு காத்திருப்பிற்கு பிறகு இரண்டாம் பாகத்தை வெளியிட்டார்.
34
kgf Yash raksha bandhan celebration
இந்த பாகம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியானதால் ஓப்பனிங்கிலேயே நல்ல வசூலை கொடுத்திருந்தது. அதோடு ரசிகர்கள் இந்த படத்தின் மூன்றாம் பாகத்திற்காக காத்திருக்கின்றனர். துப்பாக்கி சத்தம், ரத்த வெள்ளம் என யுத்த களமாக இருந்தாலும் கே ஜி எஃப் ராக்கி பாய் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தங்க சுரங்கம் குறித்தான கதைகளத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கிய இளவரசனின் கதை புதிய அத்தியாயங்கள் குறித்த எதிர்பார்ப்பை எகிர செய்துள்ளது.