Exclusive Interview: அவங்க அப்பாவால அப்படி ஆக முடியல! அந்த ஆசையை அதிதி நிறைவேற்றிட்டாங்க கார்த்தி கூறிய தகவல்!

First Published Aug 11, 2022, 8:39 AM IST

கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் விருமன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இவர்கள் ஏசியா நெட்டிற்க்கு 
கொடுத்த பிரத்தேயேக பேட்டி இதோ... 

நீண்ட இடைவெளிக்கு பின்னர், கிராமத்து கதையில் நடித்துள்ள நடிகர் கார்த்தி, 'விருமன்'  படம் குறித்து கூறுகையில்... "கிராமத்து கதையில் தான் என்னுடைய சினிமா பயணம் துவங்கியது. கொரோனாவிற்கு பிறகு திருவிழாக்களில் கூட இப்போது தான் கூட்டம் வருகிறது. இது உறவுகள் பற்றி பேச கூடிய திரைப்படம். பெரிய குடும்பத்தை பற்றி பேசக்கூடிய படமாக இருக்கும். முரண்பாடாக உள்ள தந்தை - மகன் பற்றிய உறவு இந்த படத்தில் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதிலும் பிரகாஷ்ராஜ் சார் போன்றவருடன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் நன்றாக இருந்தது என கூறினார்.

இவரை தொடர்ந்து, விருமன் போன்ற கிராமத்து கதையில் அறிமுகமாவது குறித்து நடிகை அதிதி ஷங்கர் கூறுகையில், " திரைப்படம் நடிக்க போகிறேன் என தீர்மானித்ததுமே, கிராமத்து கதையில் தான் நடிக்க வேண்டும், சிட்டி பெண்ணாக தான் நடிக்க வேண்டும் என்பது போல் நினைக்கவில்லை. ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் போதும், என்று தான் நினைதேன். ஆனான் என்னுடைய அதிர்ஷ்டம் 'விருமன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: அடையாளம் தெரியாமல் மெலிந்து போன நடிகர்... கண் கலங்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மோகன் லால்!
 

நடிகர் கார்த்தியிடம் 'பருத்தி வீரன்' மற்றும் 'விருமன்' இந்த இரண்டு படத்திலும் உங்களுடைய தோற்றம்  எப்படி வித்தியாசப்பட்டிருக்கிறது என எழுப்பப்பட்ட கேள்விக்கு... "முதல் நாள் ஷூட்டிங்கிற்கு சென்று நான் நின்றதும் பார்ப்பதற்கு 'பருத்தி வீரன்' போல் இருப்பதாக கூறிவிட்டார்கள். அந்த படத்தில் இருப்பது போல் இருக்க கூடாது என்பதற்காக என்ன செய்யலாம் என யோசித்து, கண்ணாடி அணிந்து, லுங்கி கட்டும் ஸ்டைலை மாற்றி, டயலாக் பேசும் போது  சில மாறுதல்களை கொண்டு வந்தோம். 'பருத்தி வீரன்' படத்தில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேச்சு வழக்கு தான் அதிகம் பயன்படுத்த பட்டிருக்கும். இந்த படத்தில் தேனி மாவட்டத்தின் பேச்சு வழக்கு இருக்கும். எனவே அங்கிருந்து ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் கொண்டு வர சொல்லி சின்ன சின்ன வித்தியாசத்தையும் மாற்றினோம். அதே போல் பருத்திவீரன் கதாபாத்திரத்தை பொறுத்தவரை, அவன் அதிகம் பேச மாட்டான், பாலியல் தொழிலாளர்களிடம் போவான்... விருமன் அப்படி கிடையாது என தெரிவித்துள்ளார்.

தன்னை போலவே ஒரு கிராமத்து கதையை தேர்வு செய்து நடித்துள்ள அதிதி பற்றியும், அவரது நடிப்பு குறித்தும் பேசிய நடிகர் கார்த்தி, "பருத்தி வீரன் படத்தில் நடிக்கும் போது நான் துணை இயக்குனராக இருந்து அப்படியே நடித்தேன். நடிப்புக்காக சில ஒர்க் ஷாப் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இயக்குனர் சொல்லும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்தேன். இந்த படத்தில் எல்லாமே இயக்குனர் தான். அவர் சொல்வதை நடித்து கொடுத்தேன். ஆனால் அதிதிக்கு இந்த படத்தில் நடிக்க, மிகவும் எளிதாக இருந்தது. இயக்குனர் கூறும் சிறிய சிறிய விஷயத்தை கூட விரைவாக புரிந்து கொண்டு நடித்து ஆச்சர்யப்படுத்தினார். அதற்க்கு காரணம் அவருடைய ஜீன் என நினைக்கிறன். அவங்க அப்பா நடிகராக வேண்டும் என நினைத்து, இயக்குனர் ஆகிவிட்டார். அவருடைய ஆசையை தற்போது அதிதி நிறைவேற்றி விட்டார் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: கோவில் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய சூரி.. திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய வீடியோவை வைரலாக்கும் நண்பர்கள்..!
 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியிடம், உங்களுடைய தந்தை உங்களிடம் அவர் இயக்க உள்ள படத்தின்  கதை, கதாபாத்திரங்கள் குறித்து வீட்டில் பகிர்ந்து கொண்டது உண்டா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த அதிதி "பலரும் அப்படிதான் நினைக்கிறார்கள். உண்மையில் என் அம்மாவிடம் தான் சொல்வார். திரைப்படம் வெளியான பின்னர் படம் குறித்து உங்களுடைய கருத்தை கூறுங்கள் என கூறுவார் என கூறியுள்ளார்.

இறுதியாக கார்த்தியிடம் "ரோலக்ஸ் - டில்லி' மீட் பண்ணுவாங்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு... லோகேஷிடம் தான் கேட்க வேண்டும். கைதி பார்ட் 2 வின் கதை நடக்கும் காலம் வேறு என்பதால் அதில் ரோலக்ஸ் கதாபாத்திரம் இருக்குமா? என்பது தெரியவில்லை. ரோலக்ஸ் எங்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி ஒரு மிகப்பெரிய சர்பிரைஸ் தான் என தெரிவித்தார்.

சமீப காலமாக சூரரை போற்று, ஐயப்பனும் கோஷியும் போன்ற தேசிய விருது பெற்ற  தென்னிந்திய படங்களை உலக மக்கள் வரவேற்று வருகிறார்கள், சிறந்த கதை இருந்தால் மக்கள் அதற்க்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு இதுவே மிகபெரிய உதாரணம் என்றும், தன்னுடைய நடிப்பில் விருமன்  படத்தை தொடர்ந்து, பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது அனைவரும் சிறந்த கதைகளுக்கு ஆதரவு தரவேண்டும் என கூறி  இந்த நேர்காணலை நிறைவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: நமக்கு சோறு தான் முக்கியம்... வெளிநாட்டில் வெரைட்டியாக வெளுத்து கட்டும் பிரியா பவானி ஷங்கர்! ரீசென்ட் போட்டோஸ்
 

click me!