மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகர் சீனிவாசன். மேலும் கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என இன்னும் சில முகங்களும் இவருக்கு உண்டு. இவரது மகன்கள் வினீத் சீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் இருவரும் மலையாள திரையுலகில் இயக்குனர்களாகவும் , நடிகர்களாகவும் உள்ளனர்.