நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Published : Aug 10, 2022, 06:15 PM IST

நடிகை நயன்தாரா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
14
நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் தான் தன்னுடை காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர், உணவு ஒவ்வாமை காரணமாக வாத்தி எடுத்ததாகவும், இதனால் அவரது காதல் கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தகாக கூறப்படுகிறது.
 

24

மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சில மணி நேரங்களில், நயன்தாரா நலமாகிவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி குறித்து, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: நடிகை சினேகாவின் தாய் - தந்தைக்கு நடந்த சஷ்டியப்த பூர்த்தி! ஒன்று கூடிய உறவுகளுடன் களைகட்டிய கொண்ட்டாட்டம்!
 

34

தற்போது நயன்தாரா, பாலிவுட் திரையுலகில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்க உள்ளது. இதில் பிரபல நடிகர் விஜய் சேதுபதியும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

44

விக்னேஷ் சிவன், ஒலிம்பியாட் நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்ட நிலையில், அடுத்ததாக அஜித்தை இயக்க உள்ள படவேலையில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் நயன் - விக்கி திருமண வீடியோக்கள் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பும் ஓரிரு தினங்களுக்கு முன்னர் வெளியானது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்: உஷார்... ஜிமில் ஒர்க் அவுட் செய்தபோது பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு.! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
 

Read more Photos on
click me!

Recommended Stories