உஷார்... ஜிமில் ஒர்க் அவுட் செய்தபோது பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு.! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Published : Aug 10, 2022, 04:30 PM IST

ஜிம்மில் பயிற்சி மேற்கொண்ட போது, திடீர் என பிரபல காமெடி நடிகருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
15
உஷார்... ஜிமில் ஒர்க் அவுட் செய்தபோது பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு.! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

59 வயதாகும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா, புதன்கிழமை (இன்று) காலை புது தில்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீர் என ஏற்பட்ட லேசான மாரடைப்பு காரணமாக கீழே சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தற்போது அவர் நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
 

25

நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, சில பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் நிறைய டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். உடல்பயிற்சி என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், நிறைய அழுத்தம் கொடுத்து, உடல்பயிற்சி செய்வதால் அதுவே அவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் செய்திகள்: துன்பம் விலகி... வீட்டில் ஆனந்தம் பொங்க வைக்கும் ஆவணி அவிட்டம் வழிபடு!
 

35

தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள்... அதாவது "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" அது உடல் பயிற்சிக்கும் நன்றாக பொருந்தும். ஜிம் பயிற்சியாளர்கள் ஆலோசனையோடு மட்டுமே... அதீத பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இப்படி பயிற்சிகள் மேற்கொள்ளும் போது, உடலுக்கு தேவையான சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். 
 

45
Image: Getty Images

இல்லையெனில் உடல் சோர்வு, மயக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். தொடர்ந்து உடல்பயிற்சி செய்யும் போது... உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ள நேரம் ஒதுக்குவது அவசியம். எனவே பல்வேறு நுணுக்கங்கள் மற்றும் நிபுணர்களின் உதவியோடு பயிற்சி மேற்கொள்வதே சிறந்தது என கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்: பாக்கிய லட்சுமி சீரியல் நடிகர் விஷாலுக்கு பிரபல சீரியல் ஹீரோயினுடன் காதல் தோல்வி? தீயாய் பரவும் தகவல்!
 

55

சரியான ஆலோசனை இன்றி, இடைவிடாது பயிற்சி மேக்கொள்ளும் பட்சத்தில்... மயக்கம், மாரடைப்பு, உடல் சோர்வு, போன்றவை நேர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கிறார்கள். ஏற்கனவே, கடந்த ஆண்டு , பிரபல கன்னட இயக்குனர் புனீத் ராஜ்குமார் உடல் பயிற்சி செய்து கொண்டிருந்த போது  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிபிடத்தக்கது.

click me!

Recommended Stories