14 வருஷத்துக்கு பின் மீண்டும் இணையும் ‘அப்படிப்போடு’ காம்போ.. லோகேஷ் படத்தில் விஜய் உடன் ஜோடி சேரும் திரிஷா..!

Published : Aug 10, 2022, 03:12 PM IST

Thalapathy 67 Update : மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

PREV
14
14 வருஷத்துக்கு பின் மீண்டும் இணையும் ‘அப்படிப்போடு’ காம்போ.. லோகேஷ் படத்தில் விஜய் உடன் ஜோடி சேரும் திரிஷா..!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகாவும், வில்லனாக பிரகாஷ் ராஜும் நடித்து வருகின்றனர். மேலும் ஷியாம், சம்யுக்தா, பிரபு, குஷ்பு, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

24

வாரிசு படத்தில் நடித்து முடித்த பின்னர் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் தேர்வும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... மாவீரன் பட ஷூட்டிங் திடீரென நிறுத்தம்... ஆரம்பிச்சு ஒருவாரம் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா..!

34

இப்படத்தின் கதைக்களம் மும்பையை மையமாக வைத்து உருவாகி உள்ளதாகவும், இதில் விஜய்க்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வரை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகிய மூன்று பேர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாவிட்டதாம். எஞ்சியுள்ள மூன்றுபேர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

44

அதேபோல் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சமந்தா நடிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த இரண்டாவது ஹீரோயின் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை திரிஷா தான் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள திரிஷா இதன்மூலம் 5-வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... நான் பாடுன பாட்டு அதிதி குரலில் வெளியாகிருக்கு... விருமன் பாடல் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய ராஜலட்சுமி

Read more Photos on
click me!

Recommended Stories