சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர் ராஜலட்சுமி. இவரது கணவர் செந்திலும் ஒரு நாட்டுப்புற பாடகர் தான். இவர்கள் இருவரும் ஒரே சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் ராஜலட்சுமி இறுதிப்போட்டி வரை செல்லாவிட்டாலும், செந்தில் பைனல் வரை சென்று டைட்டிலையும் ஜெயித்து அசத்தினார்.