Viruman Story Theft : கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய விருமன்... திட்டமிட்டபடி ரிலீசாகுமா கார்த்தி படம்?

Published : Aug 10, 2022, 12:58 PM IST

Karthi's Viruman movie : கடைசி நேரத்தில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் விருமன் படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

PREV
15
Viruman Story Theft : கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய விருமன்... திட்டமிட்டபடி ரிலீசாகுமா கார்த்தி படம்?

கிராமத்து கதையம்சம் கொண்ட படங்கள் சில நடிகர்களுக்கு மட்டுமே கச்சிதமாக இருக்கும். அப்படிப்பட்ட நடிகர் தான் கார்த்தி. இவர் அறிமுகமான முதல் படமே கிராமத்து கதையம்சம் கொண்ட படம் தான். அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலம் நாயகனாக அறிமுகமான கார்த்திக்கு அப்படம் இன்றுவரை ஒரு அடையாளமாகவே உள்ளது. அதற்கு காரணம் அப்படத்தில் அவரது நடிப்பு தான்.

25

பருத்திவீரன் படத்துக்கு பின் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த கார்த்தி, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் கிராமத்துக்கு நாயகனாக களமிறங்கிய படம் தான் கொம்பன். முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, கார்த்தியின் கெரியரில் முக்கிய படமாகவும் அமைந்தது.

35

இதன்பின்னர் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடிகர் கார்த்தி, மீண்டும் முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து இருக்கிறார். இப்படம் மூலம் அவர் ஹீரோயினாகவும் அறிமுகமாகி உள்ளார்.

இதையும் படியுங்கள்... வார நாட்களிலும் வசூலை வாரிக் குவிக்கும் ‘சீதா ராமம்’ அடேங்கப்பா 5 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா..!

45

சூரி, ஆர்.கே.சுரேஷ், பிகில் பாண்டியம்மாள், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது புது சிக்கல் ஒன்றில் சிக்கி உள்ளது.

55

அதன்படி இணை இயக்குனர் ஒருவர் விருமன் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனை இயக்குனர் முத்தையா திருடி படமாக எடுத்துள்ளதாகவும் எழுத்தாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுதொடர்பாக சமாதான பேச்சும் நடைபெற்று வருகிறதாம். கடைசி நேரத்தில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் விருமன் படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கார்த்தி - முத்தையா கூட்டணியில் வெளியான கொம்பன் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... திடீர் என நடந்த 90'ஸ் நாயகிகள் கெட் டூ கெதர் பார்ட்டி... சிங்கிளாக கலந்து கொண்டு ஜமாய்த்த பிரபல நடிகர்! போட்டோ

Read more Photos on
click me!

Recommended Stories