Baakiyalakshmi
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சீரியல்களை - ரியாலிட்டி ஷோக்களும் எந்த அளவிற்கு மிகவும் பிரபலமோ... அதே போல் விஜய் டிவி பிரபலங்கள் குறித்து வெளியாகும் கிசுகிசுக்களும் மிகவும் பிரபலம்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களாக காதல் கிசுகிசுவில் சிக்கியது இரண்டு ஜோடிகள். பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருண் மற்றும் ராஜா ராணி சீரியல் வில்லி அர்ச்சனாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதில் உண்மை இல்லை என்பதை அர்ச்சனா சமீபத்தில் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சியான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் விஷால் கலந்துகொண்டார். அப்போது அவருடைய காதல் குறித்து கேள்விகள் எழுப்ப பட்டது. இதற்க்கு விஷால் சில வாரங்களுக்கு முன்பு தான் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக கூறியுள்ளார். எனவே நெட்டிசன்கள் பலரும் ரியாவை தான் விஷால் பிரேக் அப் செய்துவிட்டதாக கூறி வருகிறார்கள்.