மாவீரன் பட ஷூட்டிங் திடீரென நிறுத்தம்... ஆரம்பிச்சு ஒருவாரம் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா..!

Published : Aug 10, 2022, 02:41 PM IST

Sivakarthikeyan's Maaveeran : மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி வந்த மாவீரன் படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது.

PREV
14
மாவீரன் பட ஷூட்டிங் திடீரென நிறுத்தம்... ஆரம்பிச்சு ஒருவாரம் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா..!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் பிரின்ஸ், அயலான், மாவீரன் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். இதில் அயலான் மற்றும் பிரின்ஸ் ஆகிய படங்களின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

24

அதன்படி முதலில் பிரின்ஸ் படத்தை வெளியிட உள்ளனர். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் டூரிஸ்ட் கைடாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதேபோல் அயலான் படமும் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... நான் பாடுன பாட்டு அதிதி குரலில் வெளியாகிருக்கு... விருமன் பாடல் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய ராஜலட்சுமி

34

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வந்த படம் மாவீரன். மண்டேலா படத்துக்காக இரண்டு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் தான் இப்படத்தை இயக்குகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்துக்காக அவருக்கு ரூ.25 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

44

இதுதவிர மிஷ்கின், சரிதா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வரும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் 3-ந் தேதி பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் ஷங்கரும் இதில் கலந்துகொண்டார். இதன்பின்னர் மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான காரணத்தை படக்குழு வெளியிடவில்லை என்றாலும், பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாகவே இதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... திடீர் என நடந்த 90'ஸ் நாயகிகள் கெட் டூ கெதர் பார்ட்டி... சிங்கிளாக கலந்து கொண்டு ஜமாய்த்த பிரபல நடிகர்! போட்டோ

Read more Photos on
click me!

Recommended Stories