நடிகை சினேகாவின் தாய் - தந்தைக்கு நடந்த சஷ்டியப்த பூர்த்தி! ஒன்று கூடிய உறவுகளுடன் களைகட்டிய கொண்ட்டாட்டம்!

Published : Aug 10, 2022, 05:23 PM IST

நடிகை சினேகா சமீபத்தில் தன்னுடைய தந்தையின் பிறந்தநாளை ஆசிரமத்தில் கொண்டாடிய நிலையில், அவரது பெற்றோருக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்து அழகு பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
16
நடிகை சினேகாவின் தாய் - தந்தைக்கு நடந்த சஷ்டியப்த பூர்த்தி!  ஒன்று கூடிய உறவுகளுடன் களைகட்டிய கொண்ட்டாட்டம்!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரியான நடிகை சினேகா, மீண்டும் சினிமா என்ட்ரிக்கு தயாராகி வருவதால், அவ்வப்போது... தன்னுடைய கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் நடந்த விசேஷம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக, ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

26

பொதுவாக, வீட்டில் யாருக்காவது திருமணம் என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். அதுவும், பெற்றோருக்கு 60, 70 ஆகிய வயதில் பிள்ளைகள் திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் கிடைத்தால் அது பேரானந்தம். 

மேலும் செய்திகள்: உஷார்... ஜிமில் ஒர்க் அவுட் செய்தபோது பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு.! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
 

36

சமீபத்தில் தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளை சினேகாவின்  தந்தை ராஜாராம் கொண்டாடினார். இவருக்கும் இவருடைய மனைவி பத்மாவதி ராஜராமுக்கும் மகள்கள், மகன்கள், மருமகள்கள் என அனைத்து உறவுகளும் ஒன்று கூடி, சஷ்டியப்த பூர்த்தி செய்து அழகு பார்த்துள்ளனர்.

46

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை கண்ட சினேகாவின் ரசிகர்கள், அவருடைய தாய் - தந்தைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: பாக்கிய லட்சுமி சீரியல் நடிகர் விஷாலுக்கு பிரபல சீரியல் ஹீரோயினுடன் காதல் தோல்வி? தீயாய் பரவும் தகவல்!
 

56

இந்த புகைப்படங்களில் சினேகாவின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் உள்ளனர். அனைவருமே மிகவும் ட்ரடிஷ்னலாக பட்டு புடவை, மற்றும் நகைகளுடன் ஜொலிக்கிறார்கள்.

66

குறிப்பாக சினேகாவின் மகன் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண் பிள்ளைகளும் வேஷ்டி சட்டையிலும், பெண் குழந்தைகள் பட்டு பாவாடை, தாவணியிலும் கியூட்டாக உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் தான் நடிகை சினேகா வீட்டில், வரலஷ்மி நோம்பு மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதில் திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய குழந்தைகளுடன் கலந்து கொண்ட நிலையில், தற்போது சஷ்டியப்த பூர்த்தி நிகழ்ச்சி நடந்துள்ளது.

மேலும் செய்திகள்: திடீர் என நடந்த 90'ஸ் நாயகிகள் கெட் டூ கெதர் பார்ட்டி... சிங்கிளாக கலந்து கொண்டு ஜமாய்த்த பிரபல நடிகர்! போட்டோ
 

Read more Photos on
click me!

Recommended Stories