mukesh khanna : பாலுறவை விரும்பி அதைக் கேட்கும் பெண்கள் பாலியல் தொழிலாளர்கள்..பரபரப்பை ஏற்படுத்திய சக்திமான்
mukesh khanna shaktimaan : பாலுறவை விரும்பி அதைக் கேட்கும் பெண்கள் பாலியல் தொழிலாளர்கள்,ஏனென்றால் நாகரீக சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கண்ணியமான பெண் இதுபோன்ற விஷயங்களைச் சொல்ல மாட்டார், என முகேஷ் கண்ணா கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
90ஸ் கிட்ஸின் சூப்பர் ஹீரோ சக்திமான். கடந்த 1997 முதல் 2005 வரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ ஷோ இது தான். இதில் பிரபல சூப்பர் ஹீரோவாக, மாற்றுத்திறனாளி பண்டிட் கங்காதர், வித்யாதர் மாயாஜர், ஓங்கர்நாத் சாஸ்திரியாகவும் முகேஷ் கண்ணா நடித்திருந்தார். இன்று வரை 90 காலகட்டத்தில் வளர்ந்த குழந்தைகளின் மனத்தில் நீங்காதவர் சக்திமான். இவரை ரியல் சூப்பர் ஹீரோவாக நினைத்து பல விபரீத முடிவுகளையும் குழந்தைகள் மேற்கொண்டனர். இதனால சக்திமான் ஷோ நிறுத்தப்பட்டது.
இது தவிர நடிகர் சௌதாகர் , மைன் கிலாடி து அனாரி மற்றும் ஹேரா பெரி போன்ற சில பாலிவுட் படங்களிலும், மகாபாரதத்திலும் தோன்றியுள்ளார் முகேஷ் கண்ணா. இவர் தற்போது பீஷ்ம் இன்டர்நேஷனல் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் சமீபத்தில் இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. சேலையில் கலங்கடிக்கும் சீதாராமம் நாயகி...முந்தானையை சரியவிட்டு ஹாட் போஸ்..
இந்த வார துவக்கத்தில் 'பெண்கள் உங்களையும் கவர்ந்திழுப்பார்களா' ? என்கிற தலைப்பில் ஹிந்தி வீடியோவை பதிவிட்டார். அதில் "நான் உங்களுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறேன்' என பாலுறவை விரும்பி அதைக் கேட்கும் பெண்கள் பாலியல் தொழிலாளர்கள்,ஏனென்றால் நாகரீக சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கண்ணியமான பெண் இதுபோன்ற விஷயங்களைச் சொல்ல மாட்டார், என முகேஷ் கண்ணா கூறினார்.
இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது . இது குறித்து ரசிகர்கள் கலவையான கமெண்டுகளை தட்டிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு.. கேஜிஎப் நாயகனின் சகோதரி யார் தெரியுமா? வைரலாகும் ராக்கி பாயின் ரக்ஷபந்தன் போட்டோஸ் !
அதோடு இந்த குறிப்பால் வெறுப்படைந்த நெட்டிசன்கள் முகேஷ் கண்ணாவை "செக்ஸிஸ்ட்" என்று விமர்சிக்கின்றனர். மற்றோருவர்,, “அற்புதமான தர்க்கம். எந்தப் பெண்ணும் அவரிடம் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று எனக்குப் புரிகிறது. எனவே அவர் இந்த மாயையில் வாழ்நாள் முழுவதும் இருப்பதே பெரிய விஷயம். என கலாய்த்துள்ளார்.
அடுத்தடுத்தாக ஒருவர் "மன்னிக்கவும் சக்திமான் , இந்த முறை இங்கே நீங்கள் தவறு செய்தீர்கள்" என்றும் நான்காதவர்,, "படிக்காதவர்கள் கூட இந்த தர்க்கத்தால் அவரைப் பார்த்து சிரிப்பார்கள்." என கூறியுள்ளார்.