மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸான மான்ஸ்டர், 12த்மேன், புரோ டேடி ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கிறார். இதுதவிர பரோஸ் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் மோகன்லால்.
24
இவ்வாறு நடிப்பு, இயக்கம் என 62 வயதிலும் செம்ம பிசியாக இருக்கும் மோகன்லால், கடந்த 2012-ம் ஆண்டு யானை தந்த வழக்கில் சிக்கினார். அந்த ஆண்டு மோகன்லால் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் 4 யானைத் தந்தங்கள் சிக்கின. இந்த தந்தங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இதையடுத்து மோகன்லால் வைத்திருந்த யானைத் தந்தங்கள் இறந்த யானையில் இருந்து எடுக்கப்பட்டவை என கேரள அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பெரும்பாவூர் நீதிமன்றத்தில் உள்ள தன்மீதான யானை தந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனுதாக்கல் செய்திருந்தார்.
44
இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மோகன்லால் சட்டத்தை மீறவில்லை எனவும், அது இறந்த வளர்ப்பு யானையின் தந்தம் என்றும் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு கடுப்பான நீதிபதிகள், ஒரு சாமானியனுக்கு அரசு இவ்வளவு தளர்வுகள் அளிக்குமா என கேள்வி எழுப்பியதோடு, இதுவே அவர் நடிகராக இல்லாமல் சாதாரண நடிகராக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று பரபரப்பு கருத்தை தெரிவித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.