கமலின் அடுத்த படம் டிராப் ஆனது? உலகநாயகனுக்காக 2 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனருக்கு கல்தா..!

Published : Dec 08, 2022, 08:26 AM IST

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் கமல்ஹாசனின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிட்டதால், அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

PREV
14
கமலின் அடுத்த படம் டிராப் ஆனது? உலகநாயகனுக்காக 2 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனருக்கு கல்தா..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீசான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.420 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் கமலின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

24

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், அடுத்ததாக துணிவு பட இயக்குனர் எச்.வினோத் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார்னா சும்மாவா! ஜப்பானில் கோடி கோடியாய் கொட்டி புரமோட் செய்தும் ரஜினி பட சாதனையை நெருங்க முடியாத RRR

34
கமல், பகத் பாசில், மகேஷ் நாராயணன்

இதுதவிர பா.இரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரும் கமலுக்கு கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளனர். இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கமல் செம்ம பிசி என்பது தான் தற்போதைய நிலவரம். இந்த நிலையில், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

44

விக்ரம் படத்துக்கு முன்னரே இந்த கூட்டணி குறித்து அரசல் புரசலாக பேச்சு அடிபட்டது. இது தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் இப்படத்திற்கு கமல் திரைக்கதை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த படத்துக்காக இயக்குனர் மகேஷ் நாராயணன் 2 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், தற்போது அப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... 2022 கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரே தமிழ் படம் எது தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ..!

Read more Photos on
click me!

Recommended Stories