நடிகர் ரஜினிகாந்த்தை சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் எளிதில் கிடைத்துவிடவில்லை. உலகளவில் அவருக்கு உள்ள மவுசை வைத்து தான் அவரை இந்திய திரையுலகமே சூப்பர்ஸ்டாராக ஏற்றுக்கொண்டது. குறிப்பாக ரஜினிக்கு ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இதற்கு காரணம் அவர் நடித்த முத்து படம் தான். அந்த ஒரே படத்தின் மூலம் ஓட்டுமொத்த ஜப்பானியர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் ரஜினி.