கடந்த இரண்டு வருடங்களாக, கொரோனாவின் கோர பிடியில் சிக்கியதால் திரையரங்குகளில் எந்த படங்களும் வெளியாகாத நிலையில், 2022 ஆம் ஆண்டு திரையரங்க உரிமையாளர்கள் வாழ்க்கையில் மீண்டும் வசந்த காலத்தை துவக்கி வைத்த ஆண்டு என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்தியாவில்... அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை தற்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் போன்ற பல மொழிகளின் படங்களும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தை தான் பலர் அதிகம் தேடி உள்ளனர் என கூகுள் அறிவித்துள்ளது.
நான்காவது இடத்தில் ராஜமௌலி இயக்கிய RRR படமும், ஐந்தாவது இடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் உள்ளது. ஆறாவது இடத்தில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படமும், ஏழாவது இடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படமும் உள்ளது.