கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வரமகாலட்சுமி சில்க்ஸின் 55-வது கிளையை பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் துவக்கி வைத்தார்.. .பின்னர் அங்கு இருந்த உயர்தர வடிவமைப்புகள் கொண்ட பனாரசி, காஞ்சிபுரம், பட்டோலா, ஐகாட், ஆர்கன்சா மற்றும் குப்பம் வகை சேலைகளை ஆர்வமுடன் பார்த்து ரசித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
24
keerthy suresh in saree
கோவைக்கு முதல் முறையாக திறப்பு விழாவிற்கு வருகை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.திறப்பு விழாவிற்காக வந்த நான் வாடிக்கையாளராக மாறி சில சேலைகளை வாங்கியதாக கூறினார். 5-ம்,6-ம் வகுப்பு படிக்கும் போது கண்ணாடிக்கு முன் நின்று சேலை அணிந்து ரசித்தாகவும் சேலை கட்டுவது நமது கலாச்சாரத்தில் முன்னிறுத்துவதாக கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இதுபோல் திறப்பு விழாவிற்கு வரும் போது சேலைகளை அதிகளவு வாங்குவதாகவும் சில சமயம் அம்மாவிடம் இருந்து சேலையை சுட்டு விடுவதாக நகைச்சுவையாக கூறினார். ரகு தத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வருவதாகவும், ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் என்ற படத்தில் நடித்து வருவதாக கீர்த்தி தெரிவித்தார்.
44
keerthy suresh selfie with fans
தற்போதுள்ள காலகட்டத்தில் கைத்தறி புடவை மதிப்பு குறைந்துள்ளது அதனை ஊக்குவிக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நமது கலாச்சாரம் அழிந்து வருவதை தடுக்க வேண்டும் என்று கூறினார். கீர்த்தி சுரேஷை காண குவிந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.