இனி ஜவ்வா இழுக்க முடியாது... பிரபல சீரியலுக்கு எண்ட் கார்டு போட்ட சன் டிவி - அவர் இல்லாதது தான் காரணமா?

First Published | Oct 14, 2023, 10:33 AM IST

சன் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் திடீரென முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

sun tv serials

சீரியல் என்றாலே சன் டிவி தான் என சொல்லும் அளவுக்கு பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி நம்பர் 1 இடத்தில் நீடித்து வருகிறது சன் டிவி. டி.ஆர்.பி-யில் சன் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் உள்ளன. அந்த வகையில் சன் டிவியில் தற்போது எதிர்நீச்சல், கயல், ஆனந்த ராகம், அன்பே வா, இனியா, பாண்டவர் இல்லம், மலர் என ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் மக்களால் கொண்டாடப்படும் சீரியல்களில் பாண்டவர் இல்லமும் ஒன்று.

sun tv

பாண்டவர் இல்லம் சீரியல் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பப்ரி கோஷ், கிருத்திகா, ஆர்த்தி சுபாஷ், அனு சுலாஷ், டெல்லி குமார், நேசன், நரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வந்தது. காலம் காலமாக பகையுடன் இருக்கும் பாண்டவர் குடும்பத்துக்கும், ஜமீன் குடும்பத்துக்கும் இடையேயான பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரில் அண்ணன் - தம்பி உறவையும் அழகாக எடுத்துக்காட்டி இருந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Pandavar Illam

இதனால் மதிய நேர தொடர்களில் பாண்டவர் இல்லம் தொடருக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இந்த நிலையில், இந்த தொடருக்கு எண்ட் கார்டு போட்டுள்ளது சன் டிவி. பாண்டவர் இல்லம் தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாம். இதன் கிளைமாக்ஸ் எபிசோடும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சுமார் 1200 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிய இந்த தொடர் திடீரென முடிவுக்கு வருவதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

Pandavar Illam serial end

பாண்டவர் இல்லம் தொடரில் நடிகை அனு சுலாஷ், ரோஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந்ததன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலை விட்டு விலகினார். அவர் விலகிய பின்னரே சீரியல் டல் அடிக்க தொடங்கியது. அதனால் இனி ஜவ்வாக இழுக்க விரும்பாத சீரியல் குழுவினர் ஒருவழியாக பாண்டவர் இல்லம் தொடருக்கு எண்ட் கார்டு போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதன் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் திடீரென ரத்து செய்யப்பட்ட லியோ படத்தின் ப்ரீமியர் காட்சிகள்... காரணம் என்ன?

Latest Videos

click me!