என் புள்ளைய கேள்வி கேட்குற உரிமை எவனுக்கும் கிடையாது! கொந்தளித்த ஈஸ்வரி..! இன்றிய 'எதிர்நீச்சல்' புரோமோ!

First Published | Sep 16, 2023, 4:43 PM IST

குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் 'எதிர்நீச்சல்' சீரியல் ஒளிபரப்பாகி வருவது சற்று டல்லடிக்க துவங்கி இருந்தாலும், புதிய கோணத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத காட்சிகள் இடம்பெற துவங்கியுள்ளது.
 

'எதிர்நீச்சல்' தொடரில், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து, மாரடைப்பு ஏற்பட்டு இறந்த நிலையில், அடுத்ததாக இவரின் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்கிற மிகப்பெரிய குழப்பமே நீடித்து வருகிறது. முதலில் மாரிமுத்து நடித்த குணசேகரன் வேடத்தில், வேல ராமமூர்த்தி நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், பின்னர் பசுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவரை எந்த உறுதியான தகவல்களும் சன் டிவி தரப்பில் இருந்து வரவில்லை.

குணசேகரன் இல்லாமல், சீரியல் ஒளிபரப்பாகி வருவது, உப்பு சப்பு இல்லாதது போல் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் அவரை மிகவும் மிஸ் செய்வதாக பலர் சமூக வலைத்தளத்தில் கூறி வருவதையும் பார்க்க முடிகிறது.

Nayanthara: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கே விபூதி அடித்த நயன்தாரா! அந்த விஷயத்துக்கு பழிக்கு பழி வாங்கிட்டாரோ?

Tap to resize

இந்நிலையில் நேற்றைய எபிசோடில், ஈஸ்வரி தன்னுடைய மகன் தர்ஷனுடன் சென்று, ஜீவானந்தத்தையும், அவரின் மகள் வெண்பாவையும் பார்த்து பேசிய காட்சிகள் இடம்பெற்றது. அப்போது வெண்பா தன்னுடைய அம்மாவை பற்றி உருக்கமாக பேசியது, தர்ஷனை சங்கடத்தில் ஆழ்த்தியது. பின்னர் சித்தப்பா மற்றும் அப்பா பேச்சை கேட்டு கொண்டு அம்மாவை தவறாக நினைத்ததற்கு மன்னிப்பு கேட்டார்.

இதை தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அப்பத்தா தர்ஷனிடம் கல்லூரிக்கு பீஸ் காட்டவில்லையா என கேட்க, அந்த ஆளோட காசுல நான் படிக்க மாட்டேன் என தர்ஷன் கூறுகிறார். இதை கேட்டதும், கதிர் யாரை பார்த்து அந்த ஆளுன்னு சொல்ற என கையை ஓங்கி கொண்டு அடிக்க வருகிறார். பின்னர் ஞானமும் தர்ஷனை பார்த்து கேள்வி எழுப்ப, பத்ரகாளி போல் மாறும் ஈஸ்வரி என்னுடைய பிள்ளையை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என கூறுகிறார்.

Vanitha Net Worth: தங்கத்தட்டில் பிறந்து.. இன்று தன்னந்தனியாக தவிக்கும் வனிதா விஜயகுமார் சொத்து மதிப்பு விவரம்

குணசேகரன் கதாபாத்திரம் இல்லை என்றாலும், சீரியலை சாமர்த்தியமாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர் திருச்செல்வம். தற்போது, ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகிய மூவருமே தெரிந்தும், தெரியாமலும் வேலை செய்ய துவங்கி விட்ட நிலையில், அடுத்ததாக ஈஸ்வரியும்... தன்னுடைய திறமைக்கு ஏற்ற வேலையை செய்ய துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!