வனிதா விஜயகுமார் முதல் VJ சித்ரா வரை: மோசமான உறவில் இருந்த டிவி பிரபலங்கள்..

First Published | Sep 16, 2023, 2:05 PM IST

மோசமான உறவுகளை எதிர்த்துப் போராடிய சில தமிழ் தொலைக்காட்சி பிரபலங்களைப் பற்றிய ஒரு பார்வை இதோ...

நம் வாழ்க்கையில் அல்லது உறவில் முதலில் இருந்தது போலவே எல்லா விஷயங்களும் சிறப்பாக இருக்காது. பிரபலங்களின் வாழ்க்கை மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆம்.. நம் திரையில் பார்க்கும் சந்தோஷம் பலருக்கு நிஜ வாழ்க்கையில் எப்போதும் கனவாகவே இருக்கிறது. அந்த வகையில் மோசமான உறவுகளை எதிர்த்துப் போராடிய சில தமிழ் தொலைக்காட்சி பிரபலங்களைப் பற்றிய ஒரு பார்வை இதோ..

பிரபல நடிகையும், முன்னாள் பிக்பாஸ் தமிழ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொண்டார். வனிதாஅ விஜய்குமார் தொலைக்காட்சி நடிகர் ஆகாஷை தான் முதலில் திருமணம் செய்து கொண்டார், இந்த தம்பதிக்கு விஜய் ஸ்ரீ ஹரி மற்றும் மகள் ஜோவிகா என்ற இரு பிள்ளைகள் பிறந்தனர். பின்னர் ஒரு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜனை மணந்தார், அவருக்கு மகள் ஜெயனிதா உள்ளார். 

வனிதா விஜய்குமார் ஜூன் 2020 பீட்டர் பால் என்பவரை மணந்தார். இது வனிதாவின் மூன்றாவது திருமணமாகும். ஆனால் 2020 ஆம் ஆண்டில், வனிதா விஜயகுமாருக்கும் பீட்டருக்கும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்துவிட்டனர்.

மேஎலும் கோவாவில் அவர் தவறாக நடந்து கொண்டதால் தகராறு ஏற்பட்டது. திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு கண்ணீர் வீடியோவில், வனிதா, பீட்டரின் திருமண நிலையை சரிபார்க்கவில்லை என்றும் அவரை கண்மூடித்தனமாக நம்பியதாகவும் தெரிவித்தார். பீட்டர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாததால் வனிதா பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.


Jayashree

பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ, தனது நடிகர்-கணவர் ஈஸ்வர் ரகுநாதனுக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி தொடர்ந்து பேட்டியளித்து வந்தார். ஈஸ்வர் மதுபோதையில் தனது குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், உடல்ரீதியாக காயப்படுத்தியதாகவும் ஜெயஸ்ரீ குற்றம்சாட்டினர். மேலும் தான் தற்கொலை முயற்சி வரைக்கும் சென்றதாகவும் கூறினார்.

“ நான் தமிழனாகவே வளர்ந்தேன்..” கொந்தளித்த நடிகர் அஜித்.. எதற்காக தெரியுமா? சின்ன ரிவைண்ட்

VJ Chitra

தமிழ் தொலைக்காட்சி துறையில் பிரபலமானவர்களில் ஒருவரான வி.ஜே.சித்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் மூலம் புகழ் பெற்றார். டிசம்பர் 9-ம் தேதி வி.ஜே.சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனது ஓட்டல் அறையில் பிணமாகக் கிடந்தார். தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவு 1 மணிக்கு நடிகர் அறைக்குச் சென்றார். அவரின் காதலன் ஹேம்நாத் அவளுடன் அறையில் இருந்துள்ளார்.

ஆனால் தான் சிறிது நேரம் வெளியே சென்றதாகவும். பின்னர் மீண்டும் அறைக்கு வந்து பார்த்தபோது அறை பூட்டியிருப்பதை கண்டு கதவை உடைத்து திறந்து பார்த்ததாகவும், அவர் பிணமாக கிடந்ததாகவும் தெரிவித்தார். நடிகை சித்ரா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், தனது காதலன் ஹேம்நாத்திடம் நிறைய பணத்தை இழந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

செம்பருத்தி சீரியலில் உமா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெனிபர். தனது முன்னாள் காதலர் தன்னுடனும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் உடல் ரீதியான சண்டையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் தனது முன்னாள் காதலர் நவீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக ஜெனிபர் கூறினார். தமிழகத்தில் இன்னொரு சித்ராவாக மாற விரும்பவில்லை என்றும், சித்ரா அனுபவித்ததை உணர்ந்ததாகவும் ஜெனிபர் தெரிவித்திருந்தார்.

“அட்லி என்னை நம்ப வைச்சு ஏமாத்திட்டாரு..” நடிகை பிரியாமணி சொன்ன தகவல்..

பிரபல ஆர்.ஜே மற்றும் நடிகையான விலாசினி, சாய் ஞானபிரகாஷ் என்பவரை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்துவிட்டார். தனது கணவரால் தான் ஏமாற்றப்பட்டதாக விலாசினி தெரிவித்தார். தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தனது கணவர் துன்புறுத்தியதாகவும் தனது முன்னாள் கணவரிடமும் நிறைய பணத்தை இழந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

பிக் பாஸ் தமிழ் 5 போட்டியாளர் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி தீபா நடராஜன். தனது கணவர் அபிஷே தன்னை அடித்து துன்புறுத்தியதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் விவாகரத்து குறித்து பிக்பாஸ் வீட்டில் பேசிய அபிஷேக், அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். மேலும் முதல் தடவை அடிக்கும் போது அதை தடுக்க வேண்டும். இல்லையெனில் அதை எப்போதுமே தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

முள்ளும் மலரும் புகழ் ஷாலினி சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அவர் தனது கணவர் ரியாஸை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். பின்னர் இருவரும் விவாகரத்துக்கு சென்றனர்.

Latest Videos

click me!