Nayanthara: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கே விபூதி அடித்த நயன்தாரா! அந்த விஷயத்துக்கு பழிக்கு பழி வாங்கிட்டாரோ?
நடிகை நயன்தாரா 'ஜவான்' படத்தின் வெற்றி விழாவில் கூட கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்ட நிலையில், இது சமூக வலைத்தளத்தில், விவாதப்பொருளாக மாறியுள்ளது.
Jawan Success:
இயக்குனர் அட்லீ, பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து இயக்கி நான்கு வருடங்களுக்குப் பின் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஜவான்'. கடந்த வாரம், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான இந்த படம் தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Jawan Collection:
தென்னிந்தியாவை காட்டிலும், வட இந்தியாவில் பல திரையரங்குகளில் 'ஜவான்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகம், கேரளா, போன்ற மாநிலங்களில் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு 'ஜவான்' வரவேற்பை பெறாதது பட குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எனினும் உலக அளவில், தற்போது 'ஜவான்' திரைப்படம் சுமார் 700 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
Jawan Success Meet:
மேலும் ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை எட்டுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில், இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டம் நேற்று மும்பையில் பட குழுவினர் மத்தியில் கொண்டாடப்பட்டது. ஷாருக்கான், தீபிகா படுகோன், அட்லீ, விஜய் சேதுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் ஜவான் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆனால் நடிகை நயன்தாரா மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை ஏற்கனவே ஜவான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளாதது பாலிவுட் திரையுலகில் பேசு பொருளாக மாறிய நிலையில், வெற்றி கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ஷாருக்கானுக்கே விபூதி அடித்துள்ளார். நயன்தாராவின் தரப்பு இருந்ததோ, அவரின் அம்மா பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாரா கேரளா சென்று விட்டதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறி இருந்தார். நயன்தாராவே வீடியோவில் தோன்றி இதை கூறிய நிலையில், பின்னர் ஷாருக்கானுக்கு நயன்தாராவின் அம்மாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
ஆனால் நெட்டிசன்கள் சிலரோ.. நயன்தாரா ஷாருக்கானை பழி வாங்குவதற்காகவே இப்படி செய்து விட்டதாக கூறி வருகிறார்கள். இதற்க்கு காரணம் 'ஜவான்' படத்தில் நயன்தாராவுக்கு வழங்கிய சம்பளம் தான். ஹீரோயினாக நடித்த நயன்தாராவுக்கு 10 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், கேமியோ ரோலில் நடித்த தீபிகாவுக்கு 30 கோடி வரை சம்பளம் வழங்க பட்டுள்ளதாம். ஷாருக்கானின் இந்த செயல் ஏற்கனவே நயன்தாராவை கோவப்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இதற்கு பழி வாங்கும் விதமாகவே நயன்தாரா இப்படி செய்வதாக சமூக வலைத்தளத்தில் சில தகவல்கள் பரபரத்துக்கொண்டுள்ளது. ஆனால் இதற்கான எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.