ஜோவிகாவும் இல்ல.. விசித்திராவும் இல்ல.. பிக் பாஸ் 7 - அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் யார் தெரியுமா?

First Published | Oct 13, 2023, 6:26 PM IST

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசங்களாக வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், இந்த ஏழாவது சீசன், துவக்கத்தில் இருந்தே பல பரபரப்பான தருணங்களோடு நகர்ந்து வருகிறது.

Bigg Boss 7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய மொழிகள் பலவற்றில் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகின்ற இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இந்த முறை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் நடந்து வருகிறது. 

போடுங்கடா வெடிய.. லியோ படம்.. ஸ்பெஷல் ஷோக்களுக்கு அனுமதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Jovika

வழக்கமாக வருகின்ற போட்டியாளர்களின் அளவை தாண்டி, 18 போட்டியாளர்கள் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறக்கபட்டனர். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டை போலவே, ஸ்மால் பாஸ் வீடும் இந்த முறை மக்களுக்கு பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். பல சுவாரசியமான நிகழ்வுகளோடு நகர்ந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Raveena

இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படும் என்கின்ற ஒரு யூகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது இதுகுறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பல பார்வையாளர்கள் ஜோவிகா சிறந்த போட்டியாளராக திகழ்வதால் அவருக்குத் தான் அதிக சம்பளம் கொடுக்கப்படும் என்று கூறுகின்றனர். சிலர் ரவீனாவுக்கு தான் அதிக சம்பளம் என்றும் பலர் மூத்த நடிகை விசித்ராவிற்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறி வருகின்றனர்.

Bava Chelladurai

ஆனால் உண்மையில் வெளியான தகவல் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது என்று நான் கூற வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் வெளியேறிய பாவா செல்லதுரை அவர்களுக்குத்தான் அதிக அளவில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஆம் பாவா செல்லதுரை அவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகும், அவரை அடுத்து பிரபல நடிகரும் பாடகருமான யுகேந்திரன் அவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

19வது ஆசிய போட்டியில் பிடி உஷா சாதனையை சமன் செய்த நித்யாவுக்கு செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு!

Latest Videos

click me!