விஜய் டிவியில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் நடிகர் ஸ்டாலின், மூர்த்தி என்கிற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சுஜிதா தனுஷ் நடித்திருந்தார். மூர்த்தியின் சகோதரர்களாக வெங்கட், குமரன், சரவண விக்ரம் ஆகியோர் நடித்திருந்தனர்.