
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை மேனகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷின் இளைய மகளான கீர்த்தி சுரேஷ், சிறுவயதிலேயே தன்னுடைய தந்தை தயாரிப்பில் வெளியான மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் 2013 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த 'கீதாஞ்சலி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதைத் தொடர்ந்து தமிழில், இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த முதல் படம் வெற்றிபெறவில்லை என்றாலும், இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ரஜினி முருகன், மற்றும் ரெமோ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெற்றி பெற்றன.
நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவங்கியது! வெளியானது ஹல்தி போட்டோஸ்!
அதே போல், நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்த 'தொடரி', தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த 'பைரவா' போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தாலும், கீர்த்தி சுரேஷ் மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு குறையவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த கீர்த்தி சுரேஷுக்கு, திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான மகாநடி திரைப்படம் தான். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். மேலும் இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்தப் படத்திற்கு பின்னர் இவர் தமிழில் நடித்த சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, பென்குயின், மிஸ் இந்தியா, அண்ணாத்த, சாணி காகிதம், போன்ற படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கடந்த ஆண்டு உதயநிதிக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் கவனம் பெற்றது. அதே போல் தெலுங்கில் இவர் நடித்த படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.
டீன் ஏஜ்ஜை கடந்தாச்சு! 20-ஆவது பிறந்தநாளை செம்ம Vibe உடன் கொண்டாடிய அனிகா சுரேந்திரன்!
கடைசியாக ரகு தாத்தா திரைப்படம் வெளியான நிலையில், தற்போது இவருடைய கைவசம் ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி போன்ற படங்கள் உள்ளன. அடுத்த மாதம் 25ஆம் தேதி ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகி இருக்கும் 'பேபி ஜான்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் கீர்த்தி சுரேஷ் 32 வயதை எட்டிவிட்ட நிலையில், அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் டிசம்பர் 11ஆம் தேதி கரம் பிடிக்க உள்ளார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான போதிலும், கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இன்று திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்த கீர்த்தி சுரேஷ், அடுத்த மாதம் 11-ம் தேதி தனக்கு திருமணம் நடைபெற உள்ள தகவலை உறுதி செய்துள்ளார். ஆண்டனி தட்டில் - கீர்த்தி சுரேஷ் இருவரும் பள்ளியில் இருந்தே நண்பர்கள் என்றாலும், கல்லூரி காலங்களில் தான் காதலிக்க துவங்கினர். கோவிலுக்கு வந்த போது செய்தியாளர்களிடம் அடுத்த மாதம் தனக்கு திருமணம் நடைபெற உள்ள தகவலை உடைத்து கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.