தனுஷின் விவாகரத்தை விமர்சித்த நயன்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு

Published : Nov 29, 2024, 01:48 PM IST

Dhanush vs Nayanthara : நடிகர் தனுஷ் அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், அதை நயன்தாரா மறைமுகமாக சாடி போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

PREV
15
தனுஷின் விவாகரத்தை விமர்சித்த நயன்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு
Nayanthara vs Dhanush

நடிகர் தனுஷ் - நடிகை நயன்தாரா மோதல் தான் தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. நானும் ரெளடி தான் பட ஷூட்டிங்கின் போது அதன் பட்ஜெட் எகிற காரணமாக இருந்ததால் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த பிரச்சனை 10 ஆண்டுகளுக்கு பின் பூதாகரமாக வெடித்தது. நயன்தாரா தன்னுடைய ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் பட பாடலை பயன்படுத்திக் கொள்ள அதற்கு தனுஷ் அனுமதி தரவில்லை.

25
Nayanthara Clash with Dhanush

இதனிடையே அந்த ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் பட ஷூட்டிங்கின்போது எடுத்த காட்சிகள் சிலவற்றை பயன்படுத்தி இருப்பதை பார்த்ததும் அதற்கு உரிமை கோரி நோட்டீஸ் அனுப்பிய தனுஷ், அதை நீக்காவிட்டால் 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் எச்சரித்து இருந்தார். இதற்கு தனுஷை சரமாரியாக தாக்கி மூன்று பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்தார் நயன்தாரா. அதுமட்டுமின்றி தனுஷின் எச்சரிக்கையையும் மீறி நானும் ரெளடி தான் படத்தின் மேக்கிங் காட்சிகளை தன்னுடைய ஆவணப்படத்தில் சேர்த்திருந்தார் நயன்தாரா.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் விவாகரத்து வழக்கு! நீதி மன்றத்தின் தீர்ப்பு என்ன?

35
Nayanthara Controvery

நயன்தாராவின் அறிக்கைக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்த தனுஷ், இதுதொடர்பாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி கேட்காமல் நானும் ரெளடி தான் பட காட்சிகளை பயன்படுத்திய நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது தனுஷ் தரப்பு. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நயன்தாரா, இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

45
Nayanthara Insta Story

தனுஷ் தன் மீது வழக்கு தொடர்ந்ததை அடுத்து அவரை மறைமுகமாக தாக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார். அதில் “நீங்கள் பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும்போது, அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு வட்டியுடன் திரும்ப வரும்” என கர்மா சொன்னதாக குறிப்பிட்டு அதில் அடிக்கோடிட்டு காட்டியும் இருக்கிறார் நயன்தாரா. அவர் மொட்டை கட்டையாக இந்த பதிவை போட்டிருந்தாலும் அது தனுஷை தாக்கி தான் போட்டிருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

55
Nayanthara Indirectly Attack Dhanush

ஏனெனில் நடிகர் தனுஷுக்கு சில தினங்களுக்கு முன்னர் தான் விவாகரத்து கிடைத்தது. கடந்த 2004-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட தனுஷ், கடந்த 2022ம் ஆண்டு அவரை பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து இரண்டு ஆண்டுகளாக இவர்களது விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் விவாகரத்து அளித்து கோர்ட் உத்தரவிட்டது. அதி விமர்சிக்கும் விதமாக தான் நயன்தாரா இன்ஸ்டாவில் சூசக பதிவை போட்டிருக்கிறார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... வசமாக சிக்கிய நயன்தாரா; நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Read more Photos on
click me!

Recommended Stories