அமரன் – சிவகார்த்திகேயனுக்கு ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி விருது!

Published : Nov 29, 2024, 01:28 PM IST

Sivakarthikeyan Army Award : அமரன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு ராணுவ அதிகாரிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

PREV
14
அமரன் – சிவகார்த்திகேயனுக்கு ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி விருது!
Sivakarthikeyans Amaran

Sivakarthikeyan Army Award : ஒட்டு மொத்த உலகமே கொண்டாடிய ஒரு படம் தான் அமரன். இராணுவ வீரர்களின் உணர்வும், அவர்களது கஷ்டங்களையும் தெளிவாக எடுத்துக் காட்டியவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் தான் அமரன்.

24
Sivakarthikeyan Army Award

மறைந்த தமிழக இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திய அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்தில் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

அமரன் வெளியாகி இன்றுடன் 29 நாட்கள் கடந்த நிலையில் இந்தியா முழுவதும் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து உலகளவில் ரூ.320 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக வந்த எந்தப் படமும் சிவகார்த்திகேயனுக்கு ரூ.150 கோடியை கூட நெருங்கியதில்லை. முதல் முறையாக அமரன் அவரை ரூ.300 கோடி பட்ஜெட்டில் இணைந்து மாஸ் ஹீரோவாக உயர்த்தியுள்ளது.

34
Amaran Box Office Collection

இதன் மூலமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், விக்ரம், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரது வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இதுவரையில் அமரன் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் என்று எதுவும் வந்ததில்லை.

இராணுவ வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றி கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது ஓடிடிக்கும் வந்துள்ளது. வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. நெட்பிளிக்ஸ் தளத்தில் அமரன் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

44
Sivakarthikeyan Army Award

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், நடிகர்கள், இராணுவ அதிகாரிகள் என்று எல்லோருமே படத்தை கௌரவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்த படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு இராணுவ அதிகாரிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமி சார்பில் விருது வழங்கப்பட்டது. அமரன் படத்தைத் தொடர்ந்து தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே23 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories