டபுள் எவிக்‌ஷனா! பிக் பாஸ் வீட்டைவிட்டு ஜோடியாக எலிமினேட் ஆகப்போவது யார்?

First Published | Nov 29, 2024, 12:49 PM IST

Double eviction in Bigg Boss : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்க வாய்ப்புள்ளதால் யார்.. யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கடந்த வாரம் வரை பெரியளவில் சண்டைகள் எதுவும் இல்லாததால் சற்று டல்லாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால் இந்த வாரம் முதல் ஆட்டம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். காரணம், இந்த வாரம் நடைபெற்ற ‘நானும் பொம்மை நீயும் பொம்மை’ டாஸ்க் தான். இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அடிதடியில் இறங்கியதால் இந்த வார இறுதியில் அவர்களுக்கு வார்னிங் கொடுக்கவும் வாய்ப்புள்ளது.

Bigg Boss Tamil season 8 contestants

குறிப்பாக ரயான் - ராணவ் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த டாஸ்க்கின் இறுதியில் ஜெஃப்ரி வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் அடுத்த வாரத்திற்கான நாமினேஷனில் இருந்து ஜெஃப்ரி தப்பித்துள்ளார். அதேபோல் இந்த வாரம் சிறப்பாக பங்கெடுத்த போட்டியாளர்களாக ஜெஃப்ரி மற்றும் சாச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் தான் அடுத்த வாரம் தலைவர் போட்டியில் பங்கெடுக்க உள்ளனர்.

இதையும் படியுங்கள்... சவுண்டு சரோஜாவாக மாறி; ராணவ்வை அடிக்க பாய்ந்த செளந்தர்யா - பிக் பாஸில் வெடித்த பிரச்சனை

Tap to resize

Tharshika, Vishal

இது ஒருபுறம் இருக்க, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷனும் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது நிகழ்ச்சி 8-வது வாரத்தை எட்டியும் இன்னும் 18 பேர் வீட்டில் உள்ளனர். இதனால் இந்த வாரம் கட்டாயம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வார எவிக்‌ஷன் லிஸ்ட்டில் 10 பேர் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் ஜாக்குலின், அன்ஷிதா மற்றும் விஷால் ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

Bigg Boss This Week Eviction

அடுத்ததாக ரயான், மஞ்சரி, சத்யா, ரஞ்சித் ஆகியோருக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர்களும் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இந்த லிஸ்ட்டில் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ள ஷிவக்குமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா ஆகியோர் தான் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்கள் மூவரில் இருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அதில் சாச்சனாவுக்கு மிக கம்மியான வாக்குகளே கிடைத்துள்ளதால் அந்த இருவரில் ஒருவராக சாச்சனா கண்டிப்பாக இருப்பார் என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுக்கும் கமல்; பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி?

Latest Videos

click me!